விமானத்தில் சிகரெட் பிடித்தவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் சிகரெட் பிடித்தவன் கைது

Added : மே 26, 2019 | கருத்துகள் (8)

சென்னை: விமானத்தில், சிகரெட் பிடித்த நபரை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

குவைத்தில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை வந்து கொண்டிருந்தது.அதில் வந்த பயணி ஒருவன், விமான பாதுகாப்பு சட்டத்தை மீறி, பறந்து கொண்டிருந்த விமானத்தில், சிகரெட் பற்ற வைத்து, சக பயணியர் முகத்தில், புகையை ஊதினான். இதற்கு, சக பயணியர் எதிர்ப்பு தெரிவித்தனர்.விமான பணிப் பெண்கள், அவனிடம் இருந்து, வலுக்கட்டாயமாக சிகரெட்டை பறித்து, அணைத்தனர். இதனால் ஆத்திரமடைந்தவன், பணிப்பெண்கள் மற்றும் சக பயணியரை, தகாத வார்த்தைகளால் திட்டினான்.

இது குறித்து விமான பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு தகவல் கொடுத்தார்.அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு தரையிறங்கியது.தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் ஏறி, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விமான நிலைய போலீசார் விசாரணையில், அவன், தஞ்சையைச் சேர்ந்த, இஸ்மாயில், 33, என்பதும், குவைத்தில், ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியதும் தெரிந்தது.விமான நிறுவனம், விமான நிலைய மேலாளர் அளித்த புகாரின்படி, இஸ்மாயில் கைது செய்யப்பட்டான்; அவனிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X