அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு: இளங்கோவன் அறிவிப்பு

Added : மே 27, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை:''தேனி தொகுதியில் தேர்தல் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன; விரைவில் வழக்கு தொடருவேன்'' என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி:தேனியில் என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. காங்கிரசில் உள்ள எட்டு பேர் வெற்றி பெறும் போது திருஷ்டி பரிகாரம் போல தோற்கடிக்கப்பட்டுள்ளேன். தொகுதி மக்கள் 4.5 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர்; அவர்களுக்கு நன்றி.தேனி தொகுதியில் ஓட்டு மிஷினில் தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு செய்துள்ளது. ரவீந்திரநாத் குமாருக்கு தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் அளித்துள்ளது; இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்திருக்கிறேன்; வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வழக்கு தொடர உள்ளேன்.ஓட்டு எண்ணிக்கையின் போது பல ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'சீல்' இல்லை. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மதுரை கோவை திருவள்ளூரில் இருந்து எடுத்து வரப்பட்டது ஏன் என தேர்தல் ஆணையம் விளக்கம் தரவில்லை. எனவே தேனி தொகுதியில் உள்ள ஓட்டுப்பதிவு ஒப்புகை சீட்டுகளை மொத்தமாக எண்ண வேண்டும்.ராகுல் கடுமையாக உழைத்தார்; அவர் பதவி விலக வேண்டியதில்லை. மோடியின் பொய் பிரசாரத்தில் வட மாநில மக்கள் மயங்கி விட்டனர். தமிழகத்தில் அமைத்தது போல மற்ற மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்திருக்க வேண்டும். ஸ்டாலின் அறிவித்தது போல ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும்.. உத்தர பிரதேசம் மேற்கு வங்கத்தில் இரு பெண்களின் பிடிவாதத்தால் கூட்டணி அமையாமல் படுதோல்வி ஏற்பட்டுள்ளது.தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத அக்கறை பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மீது மட்டும் மோடிக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை. அ.ம.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; அவர்கள் அப்பா தி.மு.க.வாக எதிர்காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Ramanathapuram,இந்தியா
27-மே-201912:03:35 IST Report Abuse
Kannan தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நிற்க வக்கிருக்கா இளங்கோவன்
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
27-மே-201909:04:48 IST Report Abuse
V.Rajeswaran நல்ல இப்படியே புலம்பு உன் புலம்பலை கேட்கத்தான் மக்கள் உன்னை தோற்கடித்துள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
27-மே-201908:22:40 IST Report Abuse
G  Mahalingam சிதம்பரம் SIVAGANGAI 2009 வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கு போட்டால் முடிவு 25 வருடம் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X