பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்குள் கூடுதல் போலீசாருடன் புறக்காவல் நிலையம்

Added : மே 27, 2019
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் அதிக போலீசார்களை கொண்டு தனியாக புறக்காவல் நிலையம் அமைக்க சிவகங்கை எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகங்கையில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கடந்த 2013 ல் துவக்கப்பட்டது. இங்கு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவத்திற்கென தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இது தவிர தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். இது போன்று விபத்தில் சிக்கும் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டால், அது குறித்த காயம் மற்றும் இறப்பு சான்றினை சம்பந்தப்பட்ட டாக்டர்கள் கையெழுத்துடன் ஆவண காப்பகத்தில் பெற வேண்டும். இந்த பணிக்காக தினமும் ஒவ்வொரு ஸ்டேஷன்களில் இருந்து போலீசார் வந்து செல்கின்றனர்.காயச்சான்று வாங்க திணறும் போலீஸ்மதுரை போன்ற பெரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இது போன்ற காயம், இறப்பு சான்றினை பெற்றுத்தர புறக்காவல் நிலையத்தில் தனியாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இங்குள்ள புறக்காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ., உட்பட 4 போலீசார்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கும் தனியாக போலீஸ் ஸ்டேஷன் வசதி ஏற்படுத்தாமல், அவசர சிகிச்சை பிரிவிற்குள் தற்காலிக ரூம் அமைத்துள்ளனர். ரோடு விபத்து, கொலை வழக்கில் உயிரிழந்தோரின் உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளை சமாளிக்க இங்குள்ள 4 போலீசார்களால் முடியாத காரியமாகிவிடுகிறது.அதிகரிக்கும் தகராறுஇதனால் அரசு மருத்துவமனையில் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் போலீசார் இருப்பதால், மருத்துவமனை வளாகம், வார்டு பகுதியில் ரோந்து செல்ல முடியவில்லை. இதனால் உள்நோயாளிகள் படுக்கையில் வைக்கும் அலைபேசி, பணம், நகை உள்ளிட்டவை திருடு போகின்றன. பார்வையாளர்கள் நேரத்தில் மட்டுமே நோயாளிகளின் உறவினர்களை அனுமதிக்கப்படும். ஆனால் பெரும்பாலானவர்கள் டாக்டர்கள் பரிசோதனை நேரத்தில், நோயாளிகளை பார்க்க அனுமதிக்க கோரி பெரும்பாலானவர்கள் மருத்துவமனை காவலாளிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.புறக்காவல் நிலையம் அவசியம்இது போன்று அரசு மருத்துவமனையில் நடக்கும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இங்கு தனியாக ஒரு போலீஸ் ஸ்டேஷன் அமைத்து, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் என ஸ்டேஷனுக்கான போலீசாரை நியமிக்க எஸ்.பி., ஜெயச்சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி டீன் சந்திரிகாவும், புறக்காவல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X