தங்கத்தில் முதலீடு: இந்தியா நம்பர்-1

Added : மே 27, 2019 | கருத்துகள் (3)
Advertisement
gold,India,தங்கம்,முதலீடு,இந்தியா,நம்பர்-1

துபாய்: மத்திய கிழக்கு நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், தங்கம் முதலீட்டில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அரசின் உரிமை பெற்றே, துபாயில், தங்கம் தொழிலில் நிறுவனங்கள் ஈடுபட முடியும்.அந்த வகையில், துபாயில், 4,086 நிறுவனங்கள், தங்கம் துறையில் ஈடுபட லைசென்ஸ் பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, பொருளாதார மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: துபாயில், 4,086 நிறுவனங்கள், தங்கம் துறையில் ஈடுபட்டுள்ளன. தங்க ஆபரணம், வைரம் உள்ளிட்ட விலை மதிப்பில்லா கற்கள், வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பில், இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில், 60 ஆயிரத்து, 125 பேர் முதலீடு செய்துள்ளனர். அதிக அளவு முதலீடு செய்துள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், பாகிஸ்தான், பிரிட்டன், சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து, ஓமன், ஜோர்டான், பெல்ஜியம், ஏமன், கனடா உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஓஹோ -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-201914:54:54 IST Report Abuse
ஓஹோ ஓஹோ
Rate this:
Share this comment
Cancel
test -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-201914:53:35 IST Report Abuse
test worst
Rate this:
Share this comment
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
27-மே-201905:21:48 IST Report Abuse
Balan Palaniappan இது பெருமைப்பட கூடிய விஷயமா என்றால் அது இல்லை. நம் நாட்டில் 30,000 டன் தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிட பட்டுள்ளது. இதன் மதிப்பு இன்றய விலையில் 1.2 டிரில்லியன் டாலர் ஆகும். அதாவது 87 லட்சம் கோடி ரூபாய். இதனை தங்கமும் என்ன செய்கிறது? பேசாமல் ஒரு மூலையில் முடங்கி கிடக்கிறது. ஆம், இது ஒரு செத்துப்போன செல்லா காசு போன்றது. இப்போ நினைத்து பாருங்கள் இவ்வளவு பணம் வங்கிகளில் இருந்தால் நாடு எப்படி சுபிட்ஷமாகுமென்று. உடனே வாசகர்கள் நக்கலாக நீரவ் மோடி அல்லது விஜய் மல்லையா போன்றோர் கைக்கு போய்விடுமென்று உங்கள் நகைச்சுவை உணர்வை பதிவிடாதீர்கள். சிந்தியுங்கள். இதில் இன்னும் மிகவும் வருத்தப்பட வேண்டியவர்கள் தமிழர்கள்தான் ஏன் என்றால் தமிழ் நாட்டில்தான் அதிக தங்கம் இருக்கிறது (தூங்குகிறது). எல்லோரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஐந்து சவரனுக்குமேல் வைத்துக்கொள்ளாமல் மீதியை வங்கியில் டெபாசிட் செய்தாலும், இனிமேல் தங்கம் வாங்காமல் இருந்தாலும் நம்மை இந்த உலகில் யாரும் அசைக்க முடியாது. சபதமேற்போமா? நான் முன்னரே செய்து விட்டேன், நீங்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X