இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு

Added : மே 27, 2019 | கருத்துகள் (33)
Advertisement
இந்தியாவுIndia,Pakistan,பாக்., பேச்சு நடத்த,தயார்,அறிவிப்பு

இஸ்லாமாபாத்: ''அனைத்து பிரச்னைகள் குறித்தும், புதிதாக அமையும் இந்திய அரசுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்,'' என, அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமான நிலையில் உள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரின், புல்வாமாவில், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பாக்., எல்லைக்குள் சென்று, அங்குள்ள பயங்கரவாதிகள் முகாம்களை, நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைந்தால்தான், இரு தரப்பு பேச்சு நடந்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு ஏற்படும்' என, இந்தாண்டு ஏப்ரலில், அந்நாட்டு பிரதமர், இம்ரான் கான் கூறியிருந்தார். தற்போது, லோக்சபாவுக்கு தேர்தல் முடிந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைய உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார்.

அதே நாளில், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடந்த, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், நமது வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜை, பாக்., வெளியுறவு அமைச்சர், குரேஷி சந்தித்தார். 'பேச்சு மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வரவேண்டும்' என, அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் முல்தானில் நடந்த, ஒரு நிகழ்ச்சியில், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி பேசியதாவது :இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம். இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவவும், இரு நாடுகளும் வளர்ச்சியின் பாதையில் செல்வதற்கும், இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மே-201915:47:38 IST Report Abuse
இந்தியன் kumar இனி எக்காலத்திலும் நீங்கள் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது , வலிமையான தலைவர் மீண்டும் வந்திருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மே-201915:46:27 IST Report Abuse
இந்தியன் kumar தீவிரவாதிகளை இந்தியாவில் ஒப்படையுங்கள் அதன் பிறகு பேச்சு வார்த்தை நடத்துவோம்
Rate this:
Share this comment
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-மே-201913:45:27 IST Report Abuse
nan குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X