இன்றும், நாளையும் வெயில் எகிறும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் வெயில் எகிறும்

Added : மே 27, 2019
இன்றும், நாளையும் வெயில் எகிறும்

சென்னை: 'தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும்(மே 27, 28) இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்றும் நாளையும் தமிழகத்தில் இயல்பான அளவை விட வெயில் கூடும். கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்குள் தமிழகத்தின் பல பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும். சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் வெப்ப சலனத்தால் லேசான மழை பெய்யலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X