பொது செய்தி

இந்தியா

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்

Added : மே 27, 2019 | கருத்துகள் (4)
Advertisement
plastic,பிளாஸ்டிக்,ஒழிப்பு,நடவடிக்கை,ரூ.1 கோடி,அபராதம்

புதுடில்லி: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான செயல் திட்டம் குறித்த அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்காத 25க்கும் அதிகமான மாநிலங்கள் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைவதை பற்றி விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த ஆண்டு துவக்கத்தில் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்தது. அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை ஏப். 30க்குள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.

தாக்கல் செய்யாத மாநிலங்கள் மாதம் ஒரு கோடி ரூபாய் வீதம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அபராதம் செலுத்த வேண்டும்' எனகூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப். 30ம் தேதி முடிந்து மே 30ம் தேதிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஆனால் ஆந்திரா. புதுச்சேரி. சிக்கிம். மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே செயல் திட்ட அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாட்டு திட்டத்திடம் தாக்கல் செய்துள்ளன.

இது பற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் எஸ்.கே.நிகம் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் எங்கள் உத்தரவை மாநிலங்கள் மதிக்காததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தோம். இப்போது தீர்ப்பாயத்தின் உத்தரவையும் அவர்கள் மதிக்கவில்லை. அதனால் அதற்கான அபராதத்தை அவர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-201913:10:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அந்த மாதத்திற்கு முப்பது கோடி ரூபாயை அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து செலுத்தவேண்டும். தமிழகம் கூட சமர்ப்பிக்கவில்லை என்பது அதிர்ச்சியான செய்தி , ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டமும் முறையாக செயல்படுத்தப்பட வில்லை. எல்லா ஓட்டல்களும் பிளாஸ்டிக் பைகள் தான் உயயோகப்படுத்தப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
27-மே-201908:08:26 IST Report Abuse
venkatan அது சரிங்க..பிளாஸ்டிக் ஐ தடை பன்னீட்டோம்னு ஒரு பேப்பர்ல ஆணை பிரப்பித்தால் எல்லாம் ஆயிற்று...கள அளவில் போய் யார் பார்த்தார்கள்?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-மே-201911:59:55 IST Report Abuse
தமிழ்வேல் சரியா சொன்னீங்க. புதுவையில் எந்த மாற்றமும் இல்லை. பிளாஸ்டிக் அமோகமாக புரளுகின்றது....
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
27-மே-201907:16:28 IST Report Abuse
Nathan ஹாஈ, இது நாங்க பை தயாரிக்கிற கம்பெனிங் கையூட்டுக்கு ஒரு தூசு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X