ஜாகிர் நாயக் வங்கி கணக்கில் போலி பெயர்களில் நன்கொடை

Added : மே 27, 2019 | கருத்துகள் (71)
Advertisement
zakir naik,ஜாகிர் நாயக்,வங்கி கணக்கு,போலி பெயர்,நன்கொடை

புதுடில்லி: மதப் பிரசாரம் மூலம் வன்முறையை துாண்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ள, முஸ்லிம் மதப் பிரசாரகர், ஜாகிர் நாயகின் வங்கி கணக்குகளில், போலி பெயர்கள் மூலம், பல கோடி ரூபாய் நன்கொடை செலுத்தப்பட்டுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், ஐ.ஆர்.எப்., எனப்படும், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவன், ஜாகிர் நாயக். மதப் பிரசாரம் என்ற பெயரில், மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்துவதாகவும், வன்முறையை துாண்டி விடுவதாகவும், அவர் மீது, 2016ல் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஆசிய நாடான, மலேஷியாவில், அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாகிர் நாயக் மற்றும் அவருக்கு சொந்தமான அறக்கட்டளை செய்துள்ள பண மோசடிகள் குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத் துறை நடத்திய விசாரணையின் அறிக்கை, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியுள்ளதாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், மலேஷியா என, பல நாடுகளில் இருந்து, ஜாகிர் நாயக் மற்றும் அவருக்கு சொந்தமான அறக்கட்டளையின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. நன்கொடை என்ற பெயரில், போலியான பெயர்களில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2003 முதல், 2017 வரை, 64.86 கோடி ரூபாய் நன்கொடை, இந்தியாவில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, ஜாகிர் நாயகின் வங்கி கணக்கில், 49.20 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. முஸ்லிம் இளைஞர்களை துாண்டி விடும் வகையிலும், மற்ற மதத்தினர் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், ஜாகிர் நாயக் பல கூட்டங்களில் பேசியுள்ளார். மேலும், வன்முறையை துாண்டும் வகையிலும் பேசியுள்ளார். இவ்வாறு பேசுவதற்காக, வெளிநாடுகளில் இருந்து போலி பெயர்களில், அவருடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KNR - Torronto,கனடா
27-மே-201918:45:53 IST Report Abuse
KNR பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெயர் தெரியாத நபர்களிடம் வாங்கிய கோடி கோடி பணமெல்லாம் என்ன கணக்கு...
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
27-மே-201916:35:56 IST Report Abuse
kumarkv தமிழ் நாட்டில இவனை மாதிரி இருந்தான் பழனி பாபா. அவனை கொன்றால் போல இவனை கொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-மே-201915:39:23 IST Report Abuse
Endrum Indian நன்கொடை அல்ல வன்கொடை என்ற பெயரில் அழைக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X