பொது செய்தி

இந்தியா

இன்று கைதாகிறார் கோல்கத்தா மாஜி கமிஷனர்?

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
கோல்கத்தா, மாஜி கமிஷனர் ராஜீவ் கமிஷனர், சாரதா நிதி நிறுவன ஊழல், சிபிஐ

கோல்கத்தா : சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் கோல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், சிபிஐ.,யால் இன்று (மே 27) கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்படாதது குறித்து ராஜீவ் குமாரிடம் விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை, கோல்கத்தா போலீசார் சிறைபிடித்தனர். இதனை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில், ராஜீவ் குமாரும் பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. தொடர்ந்து வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கடந்த வாரம் அவருக்கு லுக்அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது சிபிஐ குழு. ராஜீவ் குமாருக்கு அளிக்கப்பட்டிருந்த 7 நாட்கள் முன்ஜாமீன் நேற்றுடன் (மே 26) நிறைவடைந்ததை அடுத்து, இன்று நடைபெறும் விசாரணைக்கு பிறகு ராஜீவ் குமார் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
27-மே-201920:46:19 IST Report Abuse
mohankumar அடுத்தது இங்கே உள்ள ஜாமினில் சுற்றி திரியும் ஆசாமிகள் . இனி ஜாமின் கிட்டாது காங்கிரஸ் வந்திருந்தாள் நிலைமை மாறி பொய் இருக்கும் .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-201917:31:50 IST Report Abuse
J.V. Iyer உடனே கைது செய்க.
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-மே-201915:39:40 IST Report Abuse
Yaro Oruvan அய்யயோ அப்போ மமதை பேனர்ஜிக்கு டயறியா போயிருமே.. வெந்த புண்ல வேலைப்பாச்சுரங்க யுவர் ஆனார் - இப்படிக்கு டர்ராகிப்போன மமதை பேனர்ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X