பொள்ளாச்சி: நவமலைக்கு 2 கும்கி யானைகள் வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி: நவமலைக்கு 2 கும்கி யானைகள் வருகை

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019

ஆனைமலை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையை அடுத்துள்ள நவமலையில் கடந்த 2 நாளில் சிறுமி உள்ளிட்ட 2 பேரை காட்டுயானை தாக்கி கொன்றது. காட்டுயானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
டாப்சிலிப்பிலிருந்து பரணி என்ற கும்கி யானை, நேற்று (மே 26) நள்ளிரவில் நவமலைக்கு வந்தது. இதனிடையே இன்று நண்பகலில் சுயம்பு என்னும் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கும்கிகள் மூலம், அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கென 30 பேர்கொண்ட தனிப்படையையும் வனத்துறையினர் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X