புதிய அமைச்சரவை: புதுமுகங்கள்?

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையில் மே 30 அன்று பதவியேற்க உள்ள புதிய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்கள் பலர் இடம்பெற வாய்ப்புள்ளதாக பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் 'புதிய இந்தியா' திட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த அமைச்சரவை அமையும் எனவும் கூறப்படுகிறது.

2014 ம் ஆண்டு பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், மத தலைவர்கள், அனைத்து எம்.பி.,க்கள் உள்ளிட்டோருக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதே போன்று இந்த முறையும் பதவியேற்பு விழாவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எந்தெந்த நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட உள்ளது என்பது தொடர்பாகவும், விருந்தினர்களின் பட்டியல் தொடர்பாகவும் அரசு எந்த தகவலையும் கசிய விடாமல், ரகசியம் காத்து வருகிறது.
புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சரவை குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில், புதிய முகங்களை இடம்பெற செய்வது தொடர்பாக அனைத்து மூத்த தலைவர்களுடன் மோடி பேசி விட்டார். தற்போது மூத்த அமைச்சர்களுடனும் பேசி விட்டார். வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் மூத்த தலைவர் பலர் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. ஆனால் அவற்றை பொய்யாக்கும் விதமாக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளோம்.
உடல்நிலை காரணமாக மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாது என மீடியாக்களில் வலம் வரும் தகவல்கள் தவறானவை. புதுமுகங்கள் பலருக்கும் இடம் அளிக்க முடிவு செய்திருந்தாலும், அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றனர்.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளதால் அக்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்குவங்கத்தில் 2021 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அம்மாநிலத்தை சேர்ந்த எம்.பி.,க்களுக்கு முக்கிய துறைகள் அளிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
28-மே-201911:06:36 IST Report Abuse
sundarsvpr திறமை என்பதனை விட நம்பிக்கைக்கு உரியவர் அவசியம். உதாரணம் மன்மோகன் காலத்தில் 2 ஜி ஊழல். திறமையான ஊழல். நம்பிக்கை?
Rate this:
Share this comment
Cancel
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
28-மே-201904:52:28 IST Report Abuse
Desabakthan கப்பல் துறை, நிதி துறையை திருத்திரு முன்னேற்ற கழகத்துக்கு கொடுத்திருங்க.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
27-மே-201918:55:38 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM 70 வயதுக்கு அப்புறம் மந்திரி பதவி கிடையாது என்பதுதான் பாஜகவின் மோடி கொள்கைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது... அந்த கொள்கைப்படி 2020 செப்டெம்பர் 17 இல் மோடி அய்யாவுக்கு 70 வயசு பூர்த்தியாகும்... தனது கொள்கை ஊராருக்கு மட்டுமா ?? இல்லை தமக்குமானதா என்று மோடி அய்யா விளக்குவாரா ?? இது தொடர்பான பக்தகோடிகளின் ஏகோபித்த கருத்து என்னவோ ???
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
27-மே-201919:51:24 IST Report Abuse
Pannadai Pandian...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
27-மே-201919:51:46 IST Report Abuse
Pannadai Pandian...
Rate this:
Share this comment
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
28-மே-201904:46:53 IST Report Abuse
Desabakthanஅது மந்திரிகளுக்கு மட்டுமே. பிரதான மந்திரிக்கு மந்திரிக்கும் வேறுபாடு உமக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யமில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X