தமிழக மக்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் நன்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் நன்றி

Added : மே 27, 2019
ஈபிஎஸ், ஓபிஎஸ்., அறிக்கை, நன்றி, தமிழக மக்கள்

சென்னை : லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''9 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளப் பெருமக்கள் அளித்த மகத்தான வெற்றியின் காரணமாகவே அரசு நிலைபெற்றுள்ளது. லோக்சபாவில் அ.தி.மு.க.வின் குரல் ஒலிக்க தேனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தோரை புறந்தள்ளி மக்கள் மனதில் நிலை பெற்றிருப்பது இரட்டை இலைச் சின்னம்தான் என வாக்குகள் மூலம் உறுதி செய்துள்ளனர். தமிழக அரசையும், அ.தி.மு.க.வையும் பொன்னான வாக்குகளால் கட்டிக் காத்திருக்கும் வாக்களப் பெருமக்களை நேரடியாகச் சந்தித்து நன்றி கூற வேண்டியது கடமை.
வரும், ஜூன் மாதம் முதல் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வேட்பாளர்கள் நேரடி சந்திப்புகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும்,'' என்று அதில் கூறியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X