வதந்திகளை பரப்ப வேண்டாம்: காங்கிரஸ்

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி பற்றி மட்டுமே கட்சி காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டதாகவும், தேவையற்ற வதந்திகள், யூகங்களை பரப்ப வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.







வதந்திகள் யூகங்கள் ;


அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா அறிக்கையில் கூறுகையில், ''நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள், அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து மட்டுமே டில்லியில் நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஊடகங்களில் பல்வேறு யூகங்களும், வதந்திகளும் பரவி வருகின்றன.






மதிப்பளியுங்கள் ;


காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு கட்சியின் அனைத்து மாற்றங்களை செய்யவும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊடகங்களும் மற்றவர்களும் அதற்கு மதிப்பளிக்க முன்வர வேண்டும். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் நடந்ததாக பரவி வரும் தகவல்கள் துரதிருஷ்ட வசமானது,'' என்றும் சுர்ஜிவாலா விளக்கம் அளித்தார்.

காரியக் கமிட்டி கூட்டத்தில், தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கேட்டது தொடர்பாக, ராகுல் குற்றம்சாட்டியது, பிரியங்கா பேசியதாக வெளிவந்துள்ள தகவல்களில் உண்மையில்லை என்றும் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
28-மே-201904:57:35 IST Report Abuse
Desabakthan பா.ஜ.க வில் எல்லோரும் நிஜ பெயருடன் தான் இருக்கிறார்கள். பொய் பெயரில் காந்தி ஐ சேர்த்து வதந்திகளை வரலாற்றை திரிப்பது யார் பரப்புவது?
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
28-மே-201904:35:51 IST Report Abuse
blocked user நேரு குடும்ப அமைப்பு போல இந்திரா காங்கிரஸ் செயல்படுவது இந்த மட்டைக்கு புரியவில்லை போலும். வாரிசு அரசியல் செய்வது நேரு குடும்பம் - அனால் சொல்லுவது என்னவோ மற்ற தலைவர்கள் பற்றி. உணர்ச்சியற்ற கூட்டம் இப்படித்தான் பிரச்சினைகளை தீர்க்கும்...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-மே-201904:11:27 IST Report Abuse
Cheran Perumal சிறிது நாட்கள் கழித்து அந்தப்பக்கம் போனவுடன் இவரது பேச்சு வேறுமாதிரியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X