கட்சியினரை ‛காய்ச்சி' எடுத்த ராகுல், பிரியங்கா

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019 | கருத்துகள் (76)
Advertisement

புதுடில்லி: தேர்தல் தோல்வி பற்றி ஆராய்வதற்காக கூடிய காங்., காரிய கமிட்டி கூட்டத்தில், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, கட்சியினரை ராகுலும் பிரியங்காவும் காய்ச்சி எடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.







நடந்தது என்ன:


அந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன என்று ஒவ்வொரு தகவலாக வெளி வருகின்றன. கூட்டத்தில் பேசிய பிரியங்கா, ‛‛கடுமையாக தேர்தல் பிரசாரம் செய்த ராகுலின் உழைப்பை கட்சி தலைவர்கள் யாரும் பாராட்டவில்லை. நான் மட்டுமே பாராட்டினேன். அவருக்கு வேறு யாரும் ஒத்துழைப்பு தரவில்லை. ராகுலின் தலைமை பற்றி இப்போது கேள்வி எழுப்பும் தலைவர்கள், அப்போது எங்கு போனீர்கள்' என்று கேட்டார்.

முன்னாள் எம்.பி., ஜோதிராதித்ய சிந்தியா பேசும்போது, ‛‛மாநில கட்சி தலைவர்களுக்கு நிறைய அதிகாரம் கொடுக்க வேண்டும்'' என்று கேட்டாராம்.

அதற்கு பதில் அளித்த ராகுல், ‛‛இங்கேயே பல தலைவர்கள் இருக்கிறீர்கள். ஆனால் கட்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள். மகனுக்கு சீட் தராவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார். மகன்களுக்கு சீட் வாங்குவதே முதல் வேலை என்று கமல்நாத்தும், அசோக் கெலாட்டும் அலைந்தனர். அவர்கள் இருவருமே ஜெயிக்கவில்லை. ராஜஸ்தானில் ஒரு இடத்தில் கூட கட்சி வெற்றி பெறவில்லை'' என்று பொறிந்து தள்ளி விட்டார்.





அவர் மேலும் பேசும்போது, ‛‛என்னையே சில தலைவர்கள் பிளாக் மெயில் செய்கின்றனர். அதனால் தான் நான் பதவி விலகுகிறேன் என்று சொல்கிறேன். எனது இடத்துக்கு என் சகோதரி பெயரை சொல்லக் கூடாது. எங்கள் குடும்பத்தை சாராத யார் பெயரையாவது கூறுங்கள்'' என்றாராம்.

‛‛காவலாளியே ஒரு திருடன்'' என்று மோடி பற்றி ராகுல் செய்த விமர்சனத்துக்கு ஆதரவாக மற்ற தலைவர்கள் அந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை என்றும் ராகுலும் பிரியங்காவும் கோபத்தை காட்டி உள்ளனர்.

கூட்டத்தில் பிரியங்கா தான் அதிக கோபத்தில் இருந்துள்ளார். அடிக்கடி பொறுமையை இழந்து, ஆவேசமாக பேசி உள்ளார். இதைப் பார்த்து காங்., மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, ‛‛ இங்கு நடப்பதை வெளியே யாரும் சொல்லக் கூடாது'' என்றும் வேண்டுகோள் வி்டுத்துள்ளார்.ராகுல் மற்றும் பிரியங்காவின் உதவியாளர்களில் பலர் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது மற்ற தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று அறிவி்த்த ராகுல், மற்ற தலைவர்களின் வேண்டுகோளுக்குப் பிறகும் முடிவை மாற்றாமல் இருக்கிறார். இன்னும் நிறைய பேர், கெஞ்சிக் கேட்டுக்கொண்டால் மட்டுமே ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என்று ராகுல் நினைக்கிறாராம்.

தங்கள் குடும்பத்தினரைத் தவிர, வேறு யாரும் தலைவர் பதவிக்கு வர துணிய மாட்டார்கள் என்ற தைரியத்தில் இருக்கிறாராம் ராகுல்.


Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூன்-201904:08:30 IST Report Abuse
meenakshisundaram அம்மா, ராஜிவ் காந்தி மேலே வச்சிருந்த மரியாதை யை கெடுத்துறாதீங்கம்மா ,சரி .அடுத்து எப்போ மக்கள் முன்னே தோன்றுவீங்க?
Rate this:
Share this comment
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
31-மே-201917:57:10 IST Report Abuse
Tamilachi நீங்க இவ்வ்வ்ளவு கேவலமா தோத்து போனதுக்கு காரணமே பப்புவோட இந்த காவலாளியே திருடன் கோஷம் தான்.. என்னதான் எதிர்க்கட்சி பிரதமராக இருந்தாலும் அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாவது இது போன்ற கீழ்த்தரமான கோஷத்தை முன்னெடுக்காமல் இருந்திருக்கலாம்... இதற்க்கெல்லாம் மேலாக நீதி மன்றத்தில் மன்னிப்பு இன்னும் இவர்களை கீழ்த்தரமாக எண்ண தோன்றியது...இது எல்லா வற்றிற்கும் மேலாக இவர்கள் மோடியின் தவறுகள், ஊழல்களை மட்டும் சுட்டி காட்டி பேசி இருக்கலாம்.. ஆனால் தனிமனித தாக்குதலே அதிகம், இதனை ஆரம்பித்த பெருமைக்கு உரியவர் இந்த பப்பு...இவை எல்லா வற்றிற்கும் மேலாக இவர்களிடம் தாங்கள் என்னவோ ராஜ பரம்பரை என்பது போலவும்...மோடி ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து பிரதமர் ஆனதே தவறு என்பது போலவும்..பிரதமர் பதவிக்கு மோடி தகுதி இல்லாமலே அதில் ஒட்டி கொண்டு இருப்பது போலவும்... பதவிக்கு வந்த பின் தான் அவர் நல்ல விலை உயர்ந்த உடைகளையே கண்ணில் பார்ப்பது போலவும்...அவரை நீச் ஆத்மீ என்று மணி ஷங்கர் சொன்னது ராகுலின் என்ன பிரதிபலிப்பு தான்..ஆனால் எல்லா தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரவே அவர் மீது நடவடிக்கை...ஆனால் இவற்றால் எல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு மோடியும் தனி மனித மற்றும் குடும்பத்தை பற்றிய தாக்குதலை ராஜிவ் மூலமாக ஆரம்பிக்கவும் பாப்புவால்.... அகங்காரத்தின் உச்சிக்கே சென்று அதனை வெளிப்படுத்த இயலாத தேர்தல் சூழலால்...அன்பை காட்டுவதாக நாடகம் வேறு....தவளை தன் வாயால் கெடும்....வேறு உதாரணமே வேண்டாம்... நம்முடைய நடத்தயே நம் விதியை நிர்ணயிக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
31-மே-201907:23:26 IST Report Abuse
கதிரழகன், SSLC தமிழ் நாடு ரொம்ப தெளிவா இருக்கு. பூணூல் போட்ட தத்தாத்ரிய கோத்திர கவுல் பிரமணனுக்குத்தான் அவிங்க ஒட்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X