பதிவு செய்த நாள் :
பிடிவாதம்!
காங்.,தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை
கட்சியின் மூத்த தலைவர்களிடம் ராகுல், 'கறார்'

மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்காத ராகுல், 'கட்சி தலைமை பொறுப்பிலிருந்து ஒதுங்கப் போகிறேன்; அந்த முடிவில் மாற்றமில்லை; எனக்கு மாற்றாக, புதிய தலைவரை, விரைவில் அடையாளம் காணுங்கள்' என, கட்சி நிர்வாகிகளிடம் கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர்,பதவி,ராகுல்,பிடிவாதம்


லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, காங்கிரஸ் உயர் மட்ட அமைப்பான, செயற்குழுவின் கூட்டம், டில்லியில் கூடியது.அதில், 'தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்' எனக் கூறி, அதற்கான கடிதத்தையும், ராகுல் சமர்ப்பித்துள்ளார்.

குழப்பம்


ஆனால், ராகுல் அளித்த ராஜினாமா கடிதம் மீது, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், ராஜினாமா விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற குழப்பம், அக்கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.இந்நிலையில், டில்லி யில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:காங்., செயற்குழு கூட்டத்தில், ராஜினாமா கடிதம் கொடுத்ததில் இருந்தே, ராகுல், யாரையும் சந்திக்க மறுத்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற, அக்கட்சியின், எம்.பி.,க்கள், வாழ்த்து பெறுவதற்காக, ராகுலிடம் நேரம் கேட்டிருந்தனர்.

'யாரையும் சந்திக்கும் திட்டமில்லை' என, அவரது அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராகுல், தோல்வியால் துவண்டுள்ள நிலையில், அவரது நிகழ்ச்சிகள்,

சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ராகுலை சமாதானம் செய்யும் நோக்கில், மூத்த தலைவர்கள் சார்பாக, அகமது படேல், கே.சி. வேணுகோபால், நேற்று ராகுலை சந்தித்து பேசினர்.

நீடிக்கிறேன்


அப்போது, 'செயற்குழு கூட்டத்தில், நான் சொன்னது சொன்னது தான். ராஜினாமாமுடிவிலிருந்து, பின்வாங்கப் போவதில்லை. இப்போதைக்கு தலைவர் பதவியில், நீடிக்கிறேன். 'கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள், எனக்கு மாற்றாக, புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள்' என, கூறியுள்ளார்.

வேண்டாம்:


'தலைவர் பதவி, உங்கள் குடும்பத்தினர் வசம் இருந்தால் மட்டுமே, கட்சியை ஒற்றுமை படுத்த முடியும். பிரியங்காவை தலைவராக்கலாமா' என, இருவரும் கேட்டுள்ளனர். அதற்கு ராகுல், 'பிரியங்கா பெயரை இழுக்காதீர்கள்; எங்கள் குடும்பத்திற்கே, காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம்' என, கூறியுள்ளார்.

சம்மதம்


ராகுலின் ராஜினாமா முடிவில், சோனியா, பிரியங்காவுக்கும், சம்மதம் இருப்பதாக தெரிகிறது.காங்கிரஸ் காரிய கமிட்டியில், 52 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், ஓட்டுகளை கவரக்கூடிய, வசீகரம் மிக்கவர்கள் யாரும் இல்லை. இதனால் தான், நேரு குடும்பத்துக்குள்ளேயே தலைமையை, தேட வேண்டி உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

'யூக வலையில் விழ வேண்டாம்'


ராகுலின் ராஜினாமா குறித்து, ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் மேலிடம், நேற்று வெளியிட்ட அறிக்கை விபரம்:கட்சியில், சீரமைப்புகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை, தலைவர் ராகுலுக்கு, செயற்குழு கூட்டம் வழங்கியது.

Advertisement

அக்கூட்டத்தில், எந்த ஒரு தனிநபர் குறித்தும் பேசவோ, ஆலோசிக்கப்படவோ இல்லை. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, அதிகாரப்பூர்வமாக செய்தி தரப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. தங்கள் இஷ்டம் போல, செய்திகளை திரித்து பரப்புவது, ஏற்புடையதல்ல. எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, கட்சித் தலைமையே தெரிவிக்கும் வரை, ஊடகங்கள் யூக வலையில் விழ வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.

தொடரும் தலைவர் ராஜினாமாக்கள்!


காங்., தலைவர் பதவியிலிருந்து, ராகுல் விலக முன்வந்துள்ள நிலையில், பல மாநிலங்களின் தலைவர்களும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தபடி உள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி, ஆறு மாநிலங்களின், கட்சித் தலைவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுவரை, ராஜினாமா செய்துள்ளவர்கள்:உ.பி., தலைவர், ராஜ் பாப்பர்; ஒடிசாவின், நிரஞ்சன் பட்நாயக்; மஹாராஷ்டிராவின், அசோக் சவான்; பஞ்சாபின், சுனில் ஜாக்கர்; ஜார்க்கண்டின்,அஜோய் ராய்; அசாமின், ரிபுன் போரா. இவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், 'கட்சித் தலைவராக தொடர, தங்கள் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை' என, தெரிவித்துள்ளனர்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
28-மே-201920:15:03 IST Report Abuse

RajanRajanசரியான முடிவு பப்பு. இப்படியே போனா உன்னை சுத்தி இருக்கிற கூட்டமிருக்கே மொத்தமா உன்னை முழு நேர பபூன் ஆக்கி அழகு பார்த்துடுவானுங்க அத்தனை மலைமுழுங்கிகளும்.

Rate this:
rambo - Manamadurai,இந்தியா
28-மே-201918:35:14 IST Report Abuse

ramboசரியான முடிவுதான் ராகுல்.. இனி வரும் தேர்தல்களில் இயந்திரத்தில் வாக்கு பதிவு செய்யும் முறை இருக்கும் வரை மத்தியில் பாஜகவும் மாநிலங்களில் அதன் கைப்பாவைகளும் தான் ஆட்சியமைக்க முடியும்... மக்கள் கிளர்ச்சி ஒன்றே இதற்கு தீர்வு..

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
28-மே-201918:17:54 IST Report Abuse

Sathish ராகுல் அல்லது வேறு தலைவரை தேர்ந்தெடுத்தால் காங்கிரஸ் வென்றுவிடுமா?

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X