பதிவு செய்த நாள் :
கூடுதல் அவகாசம் கொடுங்கள்
மாஜிபோலீஸ் கமிஷனர் கெஞ்சல்!

கோல்கட்டா: 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கில் சிக்கியுள்ள, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமார், சி.பி.ஐ.,யில் ஆஜராகி விளக்கம் அளிக்க, கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.

சி.பி.ஐ,மாஜி கமிஷனர்,கெஞ்சல்


மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 'சாரதா சிட்பண்ட்' நிறுவனம்,முதலீட்டாளர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, புகார் எழுந்தது.இது குறித்து, மேற்கு வங்க போலீசார், முதலில் விசாரணை நடத்தினர்.

தேடப்படும் நபர்


ராஜிவ்குமார் என்ற அதிகாரி தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டது. இவர், அதற்கு பின், கோல்கட்டா போலீஸ் கமிஷனராகவும் பதவி வகித்தார்.சிட்பண்ட் ஊழல் வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ., விசாரணையில், ராஜிவ் குமார், சிட்பண்ட் மோசடி குறித்த முக்கிய தகவல்களை மறைத்தது தெரிய வந்தது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, ராஜிவ் குமார்,வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் தடுக்க, அவரை தேடப்படும் நபராக, சி.பி.ஐ., அறிவித்தது. விமான நிலையங்களுக்கு இது குறித்து

Advertisement

தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்மன்


விசாரணைக்கு ஆஜராகும்படி, ராஜிவ் குமாருக்கு, நேற்று முன்தினம், சி.பி.ஐ., சார்பில், 'சம்மன்' அனுப்பப்பட்டது. இதற்கிடையே, ராஜிவ் குமார் சார்பில், சி.பி. ஐ.,க்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தான் மூன்று நாள் விடுப்பில் இருப்பதாகவும், அதனால், விசாரணைக்கு ஆஜராவதற்கு, கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும், அவர் எழுதியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - london,யுனைடெட் கிங்டம்
28-மே-201914:37:04 IST Report Abuse

sankarஎன்னையா போலீஸ் இவரு... இதற்கே கலங்கிட்டாரு .... அதே சிட்பண்ட் வழக்கில் உள்ள அப்புச்சி தன் மகனுக்கு தலைமையை மிரட்டி சீட் வாங்கியது காற்றை காசாக்கிய கும்பலுக்கு வெற்றி .... தமிழனுக்கு உள்ள " தில் " யாருக்கும் இல்லை ...... சம்பல் கொள்ளைக்காரர்கள் வெட்க்கி தலைகுனிவர்கள்

Rate this:
28-மே-201913:11:02 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இனி என்ன குட்டிக்கரணம் போட்டாலும் நடக்காது . மம்தாவுடன் சேர்ந்து கொஞ்சம் நஞ்சமா ஆடினீர்கள். ஆப்பு காத்திருக்கிறது , உள்ளே வாருங்கள்

Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
28-மே-201912:43:05 IST Report Abuse

Nallavan Nallavanஇப்படிக் கெஞ்ச வேண்டிய இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ் ஜோடிகளையும், சொந்தத் தொலைக்காட்சிக்கே பி.எஸ்.என்.எல். இணைப்புக்களை பயன்படுத்தின போக்கிரியையும் நாம எங்கியோ ஒசரத்துல தூக்கி வெச்சிருக்கோமே....... தமிழன்டா ......

Rate this:
blocked user - blocked,மயோட்
28-மே-201913:46:05 IST Report Abuse

blocked userசத்தமா சொல்லாதீங்க மானம் போகுது... ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
28-மே-201913:55:35 IST Report Abuse

Manianஅதுதான் எப்போவெவ் போச்சே. ராஜாஜி கெஞ்சி கேட்டும் கருணா குடியை கொண்டாந்து குடிகளை குடிக்கவச்சு, ஓட்டையும் விக்க வேச்சாரே ...

Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-மே-201917:22:20 IST Report Abuse

தமிழவேல் தாத்தா தொறந்து அடுத்த வருஷமே (முழுசாவே) மூடிட்டாரு. ...

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
28-மே-201917:40:34 IST Report Abuse

Chowkidar NandaIndiaடுமிழனின் பெருமைகள் என்ன கொஞ்சமா நஞ்சமா ஒரு வரியில் சொல்லிவிட? ...

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X