அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு

Updated : மே 28, 2019 | Added : மே 28, 2019 | கருத்துகள் (85)
Share
Advertisement
LA,D.M.K,DMK,எம்.எல்.ஏ.,தி.மு.க,

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்று கொண்டனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் அ.தி.மு.க. ஒன்பது இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.ஆண்டிப்பட்டியில் மகாராஜனும், தஞ்சாவூரில் நீலமேகமும், பெரியகுளத்தில் சரவணக்குமாரும், பெரம்பூரில் சேகரும், பூந்தமல்லியில் கிருஷ்ணசாமியும், குடியாத்தத்தில் காத்தவராயனும், திருப்போரூரில் இதயவர்மனும், ஆம்பூரில் வில்வநாதனும், திருவாரூரில் பூண்டி கலைவாணனும், ஒசூரில் சத்யாவும், அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியும், ஒட்டப்பிடாரத்தில் சண்முகையாவும், தி.குன்றத்தில் சரவணனும் வெற்றி பெற்றனர்.

இவர்கள் அனைவரும், இன்று(மே 28) சபாநாயகர் தனபால் அறையில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர். சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சட்டசபையில் தி.மு.க.,வின் பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் திமுகவின் தலைமை அலுவலகத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


பொறுத்திருந்து பாருங்கள்


இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், எம்எல்ஏக்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது சட்டசபை கூடியதும் தெரியவரும். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, சட்டசபை கூடும் தேதி அறிவித்த பின்னர் முடிவெடுக்கப்படும். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.


latest tamil news
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்பது பேர் நாளை(மே 29) காலை பதவியேற்க உள்ளனர். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESAN RAMAMOORTHY - chennai,இந்தியா
29-மே-201917:11:21 IST Report Abuse
GANESAN RAMAMOORTHY ரஜினி அவர்கள் தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு மதிப்பு அளிக்கவில்லை. இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்த பிறகும் தமிழ் நாட்டுக்கு நல்ல செய்ய துணிவு இல்லை. இங்கே தி.மு.காவிற்கு பயம், அங்கே கர்நாடகாவிடம் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கேட்க வேண்டும் என்ற பயம். அவர்கள் காசு விட்டு எரிந்து விட்டு எல்லா வகையிலும் சுகமாக இருப்பார்கள். தமிழ் நாட்டு மக்கள் சினிமா பார்த்து பார்த்து அவர்கள் குடும்பத்தை மேலே தூக்கி விட்டு கொண்டே இருக்கிறார்கள் அரசியல் வாதிகள் தானாகவே வளர்கிறார்கள். எல்லா சினிமாக்காரர்களுடைய குடும்பமும் மக்கள் பணத்தால் வளர்கிறார்கள் தமிழ் நாட்டு மக்கள் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அடிப்படை தேவையான தண்ணீ ர் க்கு துன்பப்பட்டுக்கொண்டு காலத்தை தள்ளுகிறார்கள்.ரஜினி அவர்கள் தேர்தலில் நின்று இருந்தால், எந்த கட்சியும் வந்திருக்க வாய்பில்லை. கடவுள் நம்பிகை உள்ளவராகவும் இருந்து கொண்டு தி. மு.க விற்கு விட்டு கொடுத்து விட்டார்
Rate this:
Cancel
elangovan - TN,இந்தியா
28-மே-201921:16:11 IST Report Abuse
elangovan Purushothman comments are welcome. It is true how the TN people ed all corrupted person under atting cases . god to save TN people and give Brian to all voted corrupted party and persons
Rate this:
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
28-மே-201918:31:28 IST Report Abuse
கைப்புள்ள ஹம்ம்ம்ம்ம்ம் என்ன சொல்றது. பாக்கிறதுக்கு கேவலமா வயிறு வாயெல்லாம் எரியுது. ஆனா என்ன பண்றது, இலவச பிச்சைகள் எப்படா கிடைக்குமான்னு அலைகிற ஒரு கேவலமான கூட்டம் இருக்கிறப்போ இந்த மாறி ஆட்கள் பதவிக்கு வரத்தான் செய்வார்கள். இலவச பிச்சை கூட்டம்.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
29-மே-201906:36:27 IST Report Abuse
Sathya Dhara திரு கைப்புள்ள அவர்களே........நன்றி. அருமை. தங்கள் கருத்து பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது. இந்த இலவசத்திற்கு மயங்கும் மக்கள்தான் பல தீமைகளுக்கு காரணம். உழைத்து வேலை செய்ய விரும்புவதில்லை. ஓசியில் அரிசி.....துணி. எல்லாம் கிடைத்து விடுகிறது. பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் டாஸ்மாக்கில் தங்கிவிடுகிறார்கள். அதுதான் பாருங்கள். கூர்ந்து கவனியுங்கள்....பல ஓட்டல்களில் விடுதிகளில் வடநாட்டு தொழிலாளர்கள் தான் இப்போது காண முடிகிறது. ஏன்...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X