அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பதவி விலக வேண்டாம்: ராகுலிடம் ஸ்டாலின் பேச்சு

'காங்., தலைவர் பதவியிலிருந்து, நீங்கள் விலகக் கூடாது; உங்களை, என் சகோதரனாக கருதி, இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறேன்' என, ராகுலிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதவி,விலக வேண்டாம்,ராகுல்,ஸ்டாலின்,பேச்சு


லோக்சபா தேர்தலில், வெற்றியை எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு, படுதோல்வி கிடைத்துள்ளது. உ.பி., மாநிலம், அமேதியில் போட்டியிட்ட, ராகுல் தோல்வி அடைந்தார். ஆனால், கேரளா மாநிலம், வயநாட்டில் வெற்றி

பெற்றார். தென் மாநிலங்கள் மட்டும், காங்கிரசுக்கு கை கொடுத்ததால், அக்கட்சிக்கு, 52 தொகுதிகள் கிடைத்துள்ளன.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து, டில்லியில்,மேலிட தலைவர்கள் விவாதித்தனர். அப்போது, தலைவர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக, ராகுல் தெரிவித்தார். அவரின் ராஜினாமா முடிவுக்கு, சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'ராகுல் ராஜினாமா செய்தால், தென் மாநிலங்களை சேர்ந்த, காங்கிரஸ் தொண்டர்கள் தற்கொலை செய்வர்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.இந்நிலையில், நேற்று, தி.மு.க., தலைவர்ஸ்டாலின், ராகுலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சமாதானப்படுத்தி உள்ளார்.

அப்போது, ஸ்டாலின் கூறியதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., ஒரு தொகுதியில்

Advertisement

கூட வெற்றி பெறவில்லை. நானும், கட்சி பொறுப்பிலிருந்து விலக நினைத்தேன். ஆனால், கருணாநிதி, என்னை சமாதானப்படுத்தினார். இப்போது, தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. போர்க்களத்தில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.

எனவே, தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிடுங்கள்; உங்களை, என் சகோதரனாக கருதி, இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு, ராகுலிடம் அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Modify India - Calgary,கனடா
31-மே-201900:54:09 IST Report Abuse

Modify Indiaராகுல் எப்போ சகோதரன் ஆனான்?

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
30-மே-201901:53:25 IST Report Abuse

meenakshisundaramரெண்டு ஊமைகள் மாட்லாடினாவா?

Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
29-மே-201920:30:49 IST Report Abuse

Narasimhanஒரு குடும்ப கட்சி தலைவர் இன்னொரு குடும்ப கட்சி தலைவருக்கு ஆறுதல் தருகிறார்.

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X