பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அதிரடி!
தமிழகத்துக்கு, 9.19 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும்
கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

'தமிழகத்துக்கு, ஜூன் மாதத்திற்குரிய ஒதுக்கீடாக, காவிரியில், 9.19 டி.எம்.சி., தண்ணீரை, மூன்று தவணைகளில் திறக்க வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை, தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, கிடைக்க வேண்டிய காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக, புதிய வரைவு திட்டம் உருவாக்குமாறு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, பிப்ரவரியில்உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது; அதற்கான, புதிய வரைவு திட்டத்தை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இத்திட்டத்தை, தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டன.

தீவிரம்


காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்காலத் தலைவராக, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர், மசூத் உசேன் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, கர்நாடகாவின் மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்ட, அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.மத்திய நீர்வள ஆணையமும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின், வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, தமிழக அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின், மூன்றாவது கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்த பட்டியலில், கர்நாடகா அரசு அளித்துள்ள, மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையும், இடம் பெற்றிருந்தது.

இதற்கு, தமிழக அதிகாரிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து, விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, தமிழக திகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, 'மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டாம்' என, ஆணையத் தலைவர் உசேன் தெரிவித்தார்.

ஆலோசனை


பின், 'ஜூன் மாதத்துக்குரிய தண்ணீரை, கர்நாடகா திறந்து விட வேண்டும்; பிப்ரவரி முதல் மே வரையில், சுற்றுச் சூழல்பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு மாதமும், 2.5 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்' என, தமிழகம் தரப்பில்வலியுறுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து நடந்த ஆலோசனையில், 'தமிழகத்துக்கு, ஜூன் மாதத்துக்குரிய பங்கீடான, 9.19 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா திறந்து விட வேண்டும்' என, தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உசேன் கூறியதாவது:தமிழகத்துக்கு, பிலி குண்டுலுவில், திறக்கப்பட வேண்டிய தண்ணீர் குறித்து தான், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காவிரி நீர் பங்கீட்டில் கூறியுள்ளபடி, குறுவை சாகுபடிக்காக, ஜூன் மாதத்தில், தமிழகத்துக்கு, 9.19 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா திறந்து விட வேண்டும்.புதுச்சேரிக்கான, ஜூன் மாத பங்கீட்டை, தமிழகம் - புதுச்சேரி இடையிலான ஏற்பாடு தீர்மானிக்கும்.தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள், ஒருமனதாக எடுக்கப்பட்டவை.

சந்தேகம்


ஆணையத்தின் முடிவு நிறைவேறுமா என, யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனெனில், கர்நாடகா உட்பட அனைத்து தரப்பும், இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.தமிழகத்துக்கான ஜூன் மாதத்துக்குரிய பங்கீட்டை, 10 நாட்களுக்கு ஒரு முறை என, மூன்று தவணைகளில், கர்நாடகம் வழங்க வேண்டும். இவ்வாறு, உசேன் கூறினார்.

Advertisement

குறுவைக்கு நீர் திறக்க வாய்ப்பு?


மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி; நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் ஜூன், 12ல், பாசனத்துக்கு திறக்கும் நீரின் மூலம், டெல்டாவில், 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும். மேட்டூர் அணையில், 16.07 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. தற்போதைய நிலையில், குடிநீருக்கு தண்ணீர் திறப்பதால், ஜூன், 12ல், 14.5 டி.எம்.சி.,யாக குறைந்து விடும். கர்நாடகா, 9.19 டி.எம்.சி., நீர் திறக்கும் பட்சத்தில், அதிகபட்சம், 7 டி.எம்.சி., மேட்டூர் அணைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், ஜூன் இறுதியில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு, குடிநீருக்கு திறந்தது போக, 20 டி.எம்.சி.,யாக இருக்கும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா, ஜூலையில், 31.24, ஆகஸ்டில், 45.95, செப்டம்பரில், 36.76 டி.எம்.சி., என, மொத்தம், 113.95 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும்.கர்நாடகா, ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தண்ணீரை, அப்படியே வழங்கினால், டெல்டா குறுவை சாகுபடிக்கு, தொடர்ச்சியாக நீர் திறக்க முடியும். ஆனால், தென் மேற்கு பருவ மழை தீவிரம் குறைந்து, கர்நாடகா உரிய நீரை வழங்கத் தவறினால், டெல்டாவில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும்.

விவசாயிகள் வரவேற்பு


தமிழகத்திற்கு நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதற்கு, தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின், தேசியத் தலைவர், விருத்தகிரி கூறியதாவது: மேட்டூர் அணையில், 16 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. இந்த நீரை வைத்து, டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்கு அணையை திறக்க முடியாது.

கர்நாடகாவில், ஹாரங்கி,ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், 24.5 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.ஆணைய உத்தரவின்படி, ஜூன், 1 முதல், கர்நாடகா நீர் திறக்க வேண்டும். தென் மேற்கு பருவ மழையை காரணம் காட்டி, நீர் திறப்பதை தாமதப்படுத்தக் கூடாது. ஆணையத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், உத்தரவை, கர்நாடகா செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
29-மே-201911:50:59 IST Report Abuse

pattikkaattaan உத்தரவு மட்டும்தான் வரு...ம் ... ஆனா தண்ணி வாரா ...து ..

Rate this:
Divahar - tirunelveli,இந்தியா
29-மே-201911:00:05 IST Report Abuse

Divaharதண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகம் .மேகதாதுவில் ஆணை கட்ட நிர்மலா ஆதரவு. . அணை கட்டினால் தண்ணீர் தருவார்கள் என கன்னடர் சொல்கிறார்கள். யாருக்காவது புரிகிறதா?

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-மே-201907:58:19 IST Report Abuse

ஆரூர் ரங்ஜூலைக்குமுன் நாற்று நடுவது வடகிழக்கு பருவமழைக்குமுன் அறுவடை செய்யவசதியாக இருக்கும் இந்த ஒன்பது டி எம் சி நீர் குடிநீருக்கே போய்விடும் . அடுத்த மழைவரை போர்வெல் மூலம் விவசாயம் செய்வதை தடை செய்யவேண்டும் .நிலத்தடிநீர் அதல பாதாளத்துக்குபோய்க்கொண்டிருக்கிறது

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X