அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
admk,dmk,அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.க்கள்,தி.மு.க., வலை

சென்னை: முதல்வர் பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு தி.மு.க. வலை விரித்துள்ளது; 10 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை சந்திக்கும் திட்டமும் தி.மு.க. தரப்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க தி.மு.க. புதிய வியூகம் வகுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 114 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தி.மு.க.விற்கு 88 எம்.எல்.ஏ.க்கள்; அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ. என பலம் இருந்தது. சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தினகரன் உள்ளார்.
இச்சூழலில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. 13 தொகுதிகளிலும், அ.தி.மு.க. ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் வாயிலாக ஆளும் கட்சியின் பலம் 123 ஆக உயர்ந்து ஆட்சியை காப்பாற்றி உள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையும் 101 ஆக உயர்ந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 110 எம்.எல்.ஏ.க்கள் பலம் தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கிறது.இவர்களில் காங்கிரஸ்

எம்.எல்.ஏ. வசந்தகுமார் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 109 ஆக குறையும். தி.மு.க. ஆட்சியை பிடிக்க எட்டு எம்.எல்.ஏ.க்களே தேவை. சட்டசபையில் நடக்கும் ஓட்டெடுப்பில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களின் பதவி பறிபோகும். இதை தவிர்க்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை சந்திக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது போல இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என தி.மு.க. தரப்பு கணக்கு போடுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களுக்கு ரகசிய வலை விரிக்கப்பட்டுள்ளது. இழுக்கும் பொறுப்பு அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்த முன்னாள்

அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வலையில் விழுபவர்களுக்கு தகுந்த விலை கிடைக்கும் என அவர்கள் துாது விட்டுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 123 பேரில் மூன்று பேர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். மேலும் அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க.விற்கு எதிராக உள்ளனர்; அவர்களிடமும் தி.மு.க.வினர் பேச்சு நடத்தி வருகின்றனர். அதேபோல சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேசி உள்ளனர். இதை அறிந்த அ.தி.மு.க. தலைமை தங்கள் எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்கவும் தி.மு.க.வின் முயற்சியை முறியடிக்கவும் தனி கவனம் செலுத்துவதாக தெரிகிறது.
இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. கருணாநிதி பிறந்த

நாளான ஜூன் 3ல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரை மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்திக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.எங்கள் பக்கம் வர சம்மதம் தெரிவிக்கும் அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைப்பதா அல்லது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்ப்பதா என்று ஆலோசித்து வருகிறோம். சட்டசபை எப்போது கூட்டப்பட்டாலும் அப்போது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துவோம்.
ஏற்கனவே சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளோம். சட்டசபை கூடும் போது அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க சபாநாயகரை ராஜினாமா செய்ய வைக்கவும், வேறு ஒருவரை அப்பொறுப்பில் நியமிக்கவும் அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது; அது உண்மையா என்று தெரியவில்லை.
சபாநாயகர் ராஜினாமா செய்தால் நாங்கள் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவசியம் ஏற்படாது. ஆனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்படும் போது தி.மு.க. சார்பில் ஒருவரை நிறுத்துவோம். அதற்கு அ.தி.மு.க. துணியாது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.DURAI - trivandrum,இந்தியா
05-ஜூன்-201919:41:16 IST Report Abuse

N.DURAIசுடலை எந்த காலத்திலும் அதுக்கு ஒத்து வர மாடடார் .........

Rate this:
N.DURAI - trivandrum,இந்தியா
05-ஜூன்-201919:39:12 IST Report Abuse

N.DURAIஅதிமுகவை ஏமாற்றி எம்எல்ஏக்களை பறித்து ஆட்சியில் உட்காரமுடியாது. தம்பி உங்கள் அடிமட்ட ராஜதந்திரம் உன் அப்பாவோடு போய் விட்டது. ஏதாவது ஏடா கூடாமாக செய்தால் மத்தியில் உனக்கு சம்மட்டி அடி கிடைக்கும்.

Rate this:
L.SADASIVAM - viruddhachalam,இந்தியா
06-ஜூன்-201907:37:05 IST Report Abuse

L.SADASIVAMyes yes it is a true message ...

Rate this:
N.DURAI - trivandrum,இந்தியா
05-ஜூன்-201919:33:25 IST Report Abuse

N.DURAIஏற்கெனவே ஓடிப்போன MLA களின் கதி என்னவாயிற்று என்று அனைவர்க்கும் தெரியும். தினகரனை நம்பி இன்று தெருவிற்கு வந்துவிட்டார்கள். ஆகவே மற்றவர்கள் போக துணிய மாட்டார்கள்.

Rate this:
மேலும் 84 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X