மோடி பதவியேற்பு விழா: மம்தா பல்டி

Updated : மே 29, 2019 | Added : மே 29, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி, மோடி பவியேற்பு,

புதுடில்லி: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதாக அறிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று (மே 29) தனது முடிவை மாற்றி, விழாவில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று நாளை இரண்டாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட முதல்வர் மம்தா , சம்பிரதாய நிகழ்வு என்பதால், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என அறிவித்தார்.

இந்நிலையில், மம்தா கலந்து கொள்வது குறித்து பா.ஜ., எம்.பி., அர்ஜூன் கூறுகையில், தனது உறவினரை காப்பாற்றவே மம்தா டில்லி செல்வதாக தெரிவித்திருந்தார். மேலும், மோடி பதவியேற்பு விழாவில், மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 50க்கும் மேற்பட்ட பாஜ., தொண்டர்களின் குடும்பத்தினரை, கட்சி மேலிடம் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


latest tamil news




இது தொடர்பாக அவர் டுவிட்டரில் மம்தா கூறியதாவது: , புதிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். பதவியேற்பு விழாவிற்கான அழைப்பை ஏற்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், ஒரு மணி நேரமாக, மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டதாக பா.ஜ., கூறியதாக தகவல் வெளியாகின. இது உண்மைக்கு மாறானது.

மேற்கு வங்கத்தில் அரசியல் கொலைகள் நடக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்ப பிரச்னை காரணமாக அவர்கள் கொல்லப்பட்டனர். இதில் அரசியல் காரணம் இல்லை. இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.இதனால், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. இதற்கு மோடியிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த விழா ஜனநாயகத்தை கொண்டாடுவதற்கான விழா. அரசியல் லாபத்திற்காக மற்ற கட்சிகளை இழிவுபடுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.



பினராயி விஜயனும் மறுப்பு :


இதேபோல கேரள மா.கம்யூ., முதல்வர் பினராயி விஜயனும், பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
30-மே-201912:00:53 IST Report Abuse
narayanan iyer மம்தாஜி செய்தது பல்டி என்று சொல்வது தவறு. தன்மானம் இடம்கொடுக்கவில்லை .
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
30-மே-201910:25:50 IST Report Abuse
narayanan iyer மம்தாஜி செய்தது பல்டி என்று சொல்வது தவறு. தன்மானம் இடம்கொடுக்கவில்லை .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-மே-201903:36:45 IST Report Abuse
J.V. Iyer துஷ்டர்கள் தூர இருந்தால்தான் நல்லது. டெல்லி வந்தால் பதவி பறிபோய்விடுமோ என்று எல்லா எதிர்க்கட்சி முதல்வருக்கும் கிலி, பயம், எல்லாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X