சென்னை, தி.மு.க., - அ.தி.மு.க., தோல்விகளை சந்திக்காத கட்சிகள் அல்ல. பா.ம.க., மீண்டும் அதிக வேகத்தில் பயணிக்கும்' என, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பா.ம.க., போட்டியிட்ட, ஏழு தொகுதிகளிலும், தோல்வி அடைந்து விட்டதால், இனி, அக்கட்சியால், எழ முடியாது என, ஒரு கும்பல், வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது.யானை படுத்தாலும், குதிரை மட்டம் என்ற உண்மையை அறியாதது தான் அக்கூட்டம்.பா.ம.க., போட்டியிட்ட தொகுதிகளில், மொத்தம், 23 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளது. பா.ம.க., ஓட்டு வங்கி, 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுதான், 10 ஆண்டுகளில், பா.ம.க., வாங்கிய ஓட்டுகளை விட அதிகம்.லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ம.க.,வுக்கு எவ்வகையிலும், இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான், மறுக்க முடியாத உண்மை.தேர்தலில் வெற்றியும், தோல்வியும் இயல்பானவை. தி.மு.க., - அ.தி.மு.க.,வும் தோல்விகளை சந்திக்கவில்லையா... பா.ம.க.,வால், இனி எழ முடியாதா... சாதாரண வேகத்தில் பயணித்து, சரிவுகளை சந்திக்கும் போது, உடனே, அதிக வேகத்தில், மீண்டும் பயணித்து, இலக்குகளை எளிதாக கடக்கும் திறன், பா.ம.க.,வுக்கு உண்டு.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE