பதிவு செய்த நாள் :
பா.ஜ. பாணியில் காங்கிரஸ்:
புது தலைவரை நியமிக்க திட்டம்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதியாக இருக்கிறார்.'நேரு குடும்பம் அல்லாத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்; பா.ஜ. பாணியில் காங்.,கிலும் பிரதமர் வேட்பாளரும் கட்சி தலைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்ற யோசனையை மூத்த தலைவர் சோனியாவிடம் ராகுல் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., பாணி, காங்கிரஸ்,புது தலைவர், திட்டம்



லோக்சபா தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்வதில் ராகுல் உறுதியாக உள்ளார். அதனால் தான் நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு 'ராகுல் பதவி விலகக் கூடாது' என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.


சென்னையில் நேற்று தமிழக காங்கிரஸ்

தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இதற்கான ஊர்வலம் நடந்தது. 'ராகுல் தொடர்ந்து தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும்' என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் பா.ஜ. பாணியில் கட்சி தலைவர் பதவியை வேறு ஒருவரிடம் தரவும் கட்சியின் பிரதமர் வேட்பாளராக தொடரவும் ராகுல் முடிவுசெய்துள்ளார்.


இதுகுறித்து காங். வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி.க் கள் டில்லியில் ராகுலை சந்திக்க பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் யாரையும் சந்திக்க ராகுல் முன்வரவில்லை. இவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் காங்கிரசில் வெற்றி பெற்ற எம்.பி.க்க ளையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார். ராகுலை மூத்த தலைவர்கள் சிலர் மறைமுகமாக குறை சொன்ன தகவல் சோனியாவின் காதுக்கு வந்து உள்ளது.அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.


எனவே நேரு குடும்பம் அல்லாத ஒருவரிடம் கட்சி தலைவர் பதவியைகொடுக்க வேண்டும் என சோனியாவிடம் ராகுல்வலியுறுத்தி உள்ளார். மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் போன்றவர்களில் ஒருவரை கட்சி தலைவ ராக நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.மேலும் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத

Advertisement

காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்சிங், சங்மா போன்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்;



மம்தா அல்லது சரத்பவார் ஆகியோரில் ஒருவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்க லாம் என்ற யோசனையும் பரிசீலிக்க பட்டு வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


தீ குளிக்க முயற்சி



'ராகுல் பதவியில் நீடிக்க வேண்டும்' என வலியுறுத்தி காமராஜர் பவன் அருகில் திடீரென வட சென்னைமாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சித் தனர். அவர்களை அங்கிருந்த தொண்டர்கள் தடுத்து காப்பாற்றினர்.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
01-ஜூன்-201912:19:00 IST Report Abuse

THENNAVANபாவம் காங்கிரசின் உண்மைத் தொண்டர்களின் செயல் ,இத்தாலி வம்சம் வேணுமாம் பொய்யான காந்திகள் எத்தனை நாள் இந்தியனை ஏமாற்றுவார்கள், தென்னக காங்கிரசுக்கு இந்தி வேணாம் ஆனால் இத்தாலி வேணும் .

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
01-ஜூன்-201912:16:13 IST Report Abuse

THENNAVANஎன்னையா இது தீ குளிப்பது நல்ல விஜயம் தானே இதைப்போய் தடுத்து நாடகம் போடலாமா.

Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
30-மே-201921:22:20 IST Report Abuse

Vasanth Saminathanதிட்டம் என்ன தெரியுமா? சீதாராம் கேசரி போன்ற ஒருவரை நியமித்து, வெற்றி பெற்றவுடன் பிரதமர் பதவியை பிடுங்கிக்கொள்வது. ராகுலே தலைவராக நீடிப்பது இந்திய நாட்டிற்கு நலம்.

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X