சம்பவம் செய்தி

தமிழ்நாடு

18 டன் குப்பை அகற்றம்

Added : மே 30, 2019
Advertisement

மதுரை : மதுரை நகரில் வைகை ஆற்றை குப்பை தொட்டியாக பயன்படுத்தும் அவலத்தை மே 22ல் புகைப்படங்களுடன் 'தினமலர்' நாளிதழில் வெளியான கட்டுரை சுட்டிகாட்டியது. இதன் எதிரொலியாக வைகை ஆற்றில் குப்பையை அகற்றும் மெகா பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதில் 800 பணியாளர்கள் ஈடுபட்டனர்.நேற்றும் பணி நடந்தது. தத்தனேரி, யானைக்கல், நெல்பேட்டை, ஆழ்வார்புரம் பகுதிகளில் வைகை ஆற்று கரையில் தேங்கிய குப்பையை அகற்றினர். கரையோர மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.நகர்நல அலுவலர் சரோஜா கூறுகையில், 'முதல் நாளில் வைகையில் இருந்து 40 டன் குப்பையை அகற்றினோம். இரண்டாவது நாளில் 18 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. பணிகள் தொடரும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X