சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானை வளைத்த நாய்கள்: உயிருடன் மீட்ட மக்கள்

Added : மே 30, 2019
Advertisement

பனமரத்துப்பட்டி: மல்லூர் அருகே, பி.மேட்டூர் பெரிய காடு பகுதியில், நேற்று, வழி தவறி வந்த மானை, ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றிவளைத்தன. மானின் கால், வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில், நாய்கள் கடித்தன. அப்போது, அந்த வழியாக, தபால் வினியோகிக்க சென்ற, மல்லூர் தபால்காரர் இளவரசன், 24, உள்பட சிலர், நாய்களை விரட்டியடித்தனர். இதனால், உயிர்தப்பிய மான், சிறிது தூரம் ஓடி, வெற்றிநகர் அருகே மயங்கி விழுந்தது. அங்கிருந்த மக்கள், மானுக்கு பால், மோர், தண்ணீர் கொடுத்தனர். பின், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனக்காவலர்கள், மானை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.
புள்ளி மான் பலி: கெங்கவல்லி அருகே, நடுவலூர் மலையிலிருந்து, அடிவாரத்துக்கு, தண்ணீர் தேடி ஆண் புள்ளி மான், நேற்று வந்தது. அங்கிருந்த தெரு நாய்கள், மானை விரட்டிச்சென்று கடித்தது. அதில் படுகாயமடைந்த மான், சிறிது நேரத்தில் உயிரிழந்தது. தம்மம்பட்டி வனத்துறையினர், மானின் உடலை மீட்டு அடக்கம் செய்தனர்.

3 காட்டெருமை விரட்டியடிப்பு: சேலம், வீராணம் அருகேவுள்ள, தைலானூர் கிராமம், ஏற்காடு மலையையொட்டி உள்ளது. ஏற்காடு மலையில் குடிநீர் கிடைக்காத பட்சத்தில், விலங்குகள், அந்த கிராமத்துக்கு வரும். கடந்தாண்டு ஏப்ரலில், இரு காட்டெருமை, ஊருக்குள் புகுந்த நிலையில், ஒன்று சேற்றில் சிக்கி பலியானது. அதேபோல், நேற்று காலை, மூன்று காட்டெருமைகள், தண்ணீர் தேடி தைலானூருக்குள் புகுந்தன. இதனால், கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையறிந்துவந்த, வீராணம் போலீசார், வனத்துறையினர் இணைந்து, மூன்று எருமைகளையும், ஏற்காடு வனத்துக்குள் விரட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X