படத்தைப் பேசவைக்கும் விந்தை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

படத்தைப் பேசவைக்கும் விந்தை!

Added : மே 30, 2019
படத்தைப் பேசவைக்கும் விந்தை!

ஒரு நிழற்படத்தைக் கொடுத்தால், அதை வாயசைத்துப் பேசும் படம் போல ஆக்க முடியுமா? சாம்சங்கின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் ஆராய்ச்சியாளர்கள் அதை செய்து காட்டியுள்ளனர்.
மோனா லிசா ஓவியம் போன்று, பலவற்றை இதுபோல வாயசைத்து, முகபாவங்களைக் காட்டும் வகையில் காணோளித் துணுக்குகளை சாம்சங் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவில் புதிய பிரிவு 'ஜெனரேடிவ் அட்வெர்சரியல் நெட்வொர்க்' அதாவது, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் புகைப்படத்தை அலசி, வாய், மூக்கு, கண், தாடை போன்றவற்றை அடையாளம் கண்டு சொல்லும்.
இன்னொரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், லட்சக்கணக்கான பேர் பேசும் காணொளிக் காட்சித் துணுக்குகளை ஒப்பிட்டு, அந்த அசைவுகளை மட்டும் எடுத்து, புகைப்படத்தின் மீது பொருத்தி, அவற்றை இடமும் வலமுமாக தலையை அசைத்து, புருவங்களை உயர்த்தி, தாழ்த்தி, உதடுகளை பேசவைக்கும்.
மூன்றாவது செயற்கை நுண்ணறிவு மென்பொருள், இந்த போலி வீடியோக்களை அடையாளம் கண்டு விமர்சிக்கும். இப்படி முன்னும் பின்னுமாக படத்துணுக்குகள் போய்வந்தபடி இருக்கும்.
ஒரு கட்டத்திற்கு மேல் போலியை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மற்ற இரு மென்பொருள்களும் கில்லாடித் தனத்துடன் காணொளித் துணுக்குகளை உருவாக்கும்.
அதில் சிறந்தவற்றை அண்மையில் சாம்சங் ஏ.ஐ பிரிவு வெளியிட, இணையத்தில் அவை வைரலாகியிருக்கின்றன.
சாம்சங் இந்த கண்டுபிடிப்பை தனது மொபைல்களில் அறி முகம் செய்தால், என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X