பொது செய்தி

இந்தியா

மாலத்தீவு பார்லிமென்டில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு

Updated : மே 30, 2019 | Added : மே 30, 2019 | கருத்துகள் (12)
Advertisement
மோடி, மாலத்தீவு,  பார்லிமென்ட், அழைப்பு

புதுடில்லி: மாலத்தீவு பார்லிமென்டில் உரையாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமராக இன்று பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டு பயணமாக ஜூன் 7 மற்றும் 8 ம் தேதிகளில் மாலத்தீவு செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாலத்தீவு வரும் பிரதமர் மோடி தங்கள் நாட்டு பார்லிமென்டில் உரையாற்ற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மாலத்தீவு வரும் பிரதமர் மோடி, அவையில் உரையாற்ற வேண்டும் என பார்லிமென்டில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக கூறியுள்ளார்.






மாலத்தீவு சட்டப்படி, வெளிநாட்டு தலைவர்கள் பார்லிமென்டில் உரையாற்ற வேண்டும் என்றால், எம்.பி.,க்கள் அனுமதி பெற வேண்டும். இதன்படி, நேற்று( மே 29) மோடி உரையாற்றுவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

புவியியல் ரீதியில் இந்தியாவுக்கு முக்கியமான அண்டை நாடு மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாட்டிற்கு பிரதமர் மோடி முதலில் செல்வதை நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். கடந்த 2014 ல் பிரதமராக பதவியேற்ற உடன் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். அந்நாட்டு பார்லிமென்டிலும் உரையாற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
30-மே-201912:20:10 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இனி வெளிநாட்டு சுற்றுப்பயணம் தான் ஆகஸ்ட் வரை... அப்புறம் அக்டொபரில் தேர்தல் வருவதால் செப்டெம்பர் முச்சூடும் மஹா ஜார்கண்ட் ஹரியானாவில் சுற்றுப்பயணம்... அப்புறம் திரும்பவும் வெளிநாடு...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-மே-201912:50:59 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅவர் பிரதமராக வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்கிறார். சரி, உங்கள் தலைவன் இத்தாலி, பாட்டயா என்று அவரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை(?) எப்போது ஆரம்பிக்க போகிறார்?...
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
30-மே-201909:58:57 IST Report Abuse
DSM .S/o PLM நிதானம் தேவையப்பா. நிதானம் தேவை.. தொடர்ந்து நிதானம் தவறி பேசியதன் விளைவை பப்பு இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறார்..
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
30-மே-201909:12:29 IST Report Abuse
Ray 2024 தேர்தலுக்கான மோடியின் முதல் பிரச்சாரம் வெளிநாட்டில் என்ற கீர்த்தியை மாலத்தீவு பெறுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X