மாலத்தீவு பார்லிமென்டில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாலத்தீவு பார்லிமென்டில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு

Updated : மே 30, 2019 | Added : மே 30, 2019 | கருத்துகள் (12)
Share
மோடி, மாலத்தீவு,  பார்லிமென்ட், அழைப்பு

புதுடில்லி: மாலத்தீவு பார்லிமென்டில் உரையாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமராக இன்று பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டு பயணமாக ஜூன் 7 மற்றும் 8 ம் தேதிகளில் மாலத்தீவு செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாலத்தீவு வரும் பிரதமர் மோடி தங்கள் நாட்டு பார்லிமென்டில் உரையாற்ற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மாலத்தீவு வரும் பிரதமர் மோடி, அவையில் உரையாற்ற வேண்டும் என பார்லிமென்டில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


latest tamil news




மாலத்தீவு சட்டப்படி, வெளிநாட்டு தலைவர்கள் பார்லிமென்டில் உரையாற்ற வேண்டும் என்றால், எம்.பி.,க்கள் அனுமதி பெற வேண்டும். இதன்படி, நேற்று( மே 29) மோடி உரையாற்றுவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

புவியியல் ரீதியில் இந்தியாவுக்கு முக்கியமான அண்டை நாடு மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாட்டிற்கு பிரதமர் மோடி முதலில் செல்வதை நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். கடந்த 2014 ல் பிரதமராக பதவியேற்ற உடன் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். அந்நாட்டு பார்லிமென்டிலும் உரையாற்றினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X