அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேசமணி மீது திடீர் பாசம் ஏன்? வலைதள வறுவல்

Updated : மே 30, 2019 | Added : மே 30, 2019 | கருத்துகள் (39)
Advertisement
Nesamani,Pray_for_Nesamani , நேசமணி, டுவிட்டர், டிரெண்டிங்

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் டிரெண்ட் ஆனது.
பேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், இதை நம் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்டிருந்தது.

அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாக்கையும் பயன்படுத்தியிருந்தார்.


சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.

சிறிது சிறிதாக பிரபலமான இந்த ஹாஷ்டாக் நேற்று(மே 29) முதலில் சென்னையிலும் பிறகு உலக அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. மாலை முதலே சென்னையில் இந்த ஹாஷ்டாக் முதலிடத்தில் இருந்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போன்ற செய்திகளை வடிவேலுவை வைத்து உருவாக்கி, மீம்களும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31-மே-201905:11:10 IST Report Abuse
 nicolethomson யாருமே இந்த சிவில் என்ஜினீர்ஸ் குரூப் எந்த நாட்டை சேர்ந்தவன் ஹாண்டில் பண்ணுறான் என்று பார்க்கலையா? பரவா இல்லை தமிழகமே
Rate this:
Share this comment
Bhaskar Srinivasan - Trichy,இந்தியா
31-மே-201907:35:53 IST Report Abuse
Bhaskar Srinivasanஎந்த நாடு என்று தெரியவில்லை ஆனால் 70 % இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த வெளிநாட்டவர்கள்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
31-மே-201910:54:31 IST Report Abuse
Anandanநல்ல கற்பனை. உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான்....
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-ஜூன்-201904:55:31 IST Report Abuse
 nicolethomsonகற்பனை தேவை ல்லை ஆனந்தன் , எந்த நேரத்தில் எப்படி இந்த விஷயங்கள் வைரல் ஆகிறது என்று அறிந்து கொள்ள ஆவல் அந்த தேடலில் கிடைத்தது இது , அதுமட்டுமின்றி ஒவ்வொருமுறை தமிழகத்தில் ஒரு விஷயம் களம் காணும் முன்னர் அது சோசியல் மீடியாவில் எங்கிருந்து புறப்படுகிறது என்றும் அறிந்துகொள்ளுங்க , ஏனெனில் இந்தியர்களை மட்டம் தட்டுவதற்க்கென்றே ஒரு நாட்டினர் நக்கலாய் விஷயங்கள் செய்துவருகிறார்கள் , அது உங்களுக்கு புரியும்போது நீங்களும் கத்துக்க நினைப்பீங்க...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-201903:52:53 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவே விழித்தெழுந்து ஓட்டளித்து இந்தியாவின் நல்ல எதிர்காலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஆனால், தமிழ்மக்களோ.. அய்யஹோ போதையில் புரண்டு வோட்டளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்று போதை தெளியுமோ.. இறைவா..
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
31-மே-201906:55:38 IST Report Abuse
Anandanஅப்பா புலம்பிட்டீங்களா, இதுதான் அவங்களுக்கு தேவை. அவங்க ஆசையை நிறைவேத்தி விட்டுடீங்க....
Rate this:
Share this comment
Cancel
nanthuji -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-201917:09:43 IST Report Abuse
nanthuji ॐ..உலகிலேயே, சினிமா பைத்தியங்கள் அதிகம் வாழும் நாடு.. தலைவன் சிலைக்கு பால் அபிஷேகம் பண்ணுவான், 215 அடியில் கட்அவுட் வைப்பான்.. கோவில் கூட கட்டினான்.. தன் நாட்டிற்க்கு வழி காட்ட சினிமாவிலே தலைவனைத் தேடுவான்.. 1.75 லட்சம் கோடி ஊழலில் திளைத்த கூட்டத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்புவான்.. இதையெல்லாம் செய்பவன் நேசமணி ஹேஷ்டேக் பரப்ப மாட்டானா.. ஓரு பக்கம் அரசியல் ஓநாய்கள் வரிப்பணத்தை லாவகமாக சுருட்டிக் கொண்டிருக்கிறது.. பிறகு பி.ஜே.பி ஒழிக என்று கத்திவிட்டு, கிடைக்கும் பிரியாணியையும், டாஸ்மாக் மதுவையும் வாங்கி வீட்டுக்கு செல்வான், இதுவன்றோ, தமிழனின் தனிச் சிறப்பு, என்ன செய்ய, சிங்கங்களாக பிறந்த எம் தேசத்து வீரர்களை, நரிக்கூட்டமாய் மாற்றிய திராவிடக் கட்சிகள்.. விரைவில் அழியும், புதுயுகம் பிறக்கும், தமிழ் வித்துக்கள் மீண்டும் புதுப் பொலிவுடன், உதிக்கும்.. தமிழ் உலகையாளும்.. நம்பிக்கை கொள்வோம்... அதற்கு முன், மதியற்ற ஆட்டு மந்தைகள் கூட்டம் அழிவதைக் காண்போம்... தமிழுணர்வும், தன்மானமும், தேசப்பற்றும் கொண்ட தமிழன் வீறு கொண்டு வாழ்வான், பன்றிகள் கூட்டம் அழியும், இதுவே சத்தியம், இதுவே காலத்தின் நியதி... வாழ்க தமிழ்... வளர்க தமிழர் பண்பாடு..... நன்றி..
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
31-மே-201906:57:36 IST Report Abuse
Anandanஎன்னைக்காவது நாகரீகமான, நல்ல வார்த்தைகள் சொல்ல பழகு தம்பி. புலம்பிகிட்டே இருக்குறியே. நாட்டில் இருக்குற அத்தனை MP தொகுதியிலும் ஒரு கட்சி வெல்லணுமா? என்ன ஒரு அநியாயம். அதவாது ஒரு பயலும் உங்களை கேள்வி கேட்க இருக்கப்படாது அப்பத்தான் உங்க அநியாயம் வெளியே வராதுன்னு நினைப்பு....
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
31-மே-201910:59:36 IST Report Abuse
Rayநாட்டிலே ஒரேகட்சிதான் இருக்கணும்னா அது ஜனநாயகமல்ல தேர்தலே தேவையில்லையே என்கிற அடிப்படை அறிவுக்கூடவா இருக்காது இவங்களுக்கு? அப்படி ஒரே கட்சி வந்தால் அது சர்வாதிகாரமாகி மக்கள் யாவரும் (இவர்களையும் சேர்த்துதான்) கொத்தடிமைகள் ஆகி விடுவார்கள் என்பதை உணர வேண்டும்...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
31-மே-201920:22:05 IST Report Abuse
Rayசிங்கங்களாக பிறந்த எம் தேசத்து வீரர்களை, நரிக்கூட்டமாய் மாற்றிய திராவிடக் கட்சிகள்.?.நரியை பரியாக்கிய கதைதான் இங்கே கேள்விப் பட்டிருக்கிறோம் இதென்ன புதுக்கதை?...
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
01-ஜூன்-201912:50:15 IST Report Abuse
கல்யாணராமன் சு.அனந்தன், அப்போ, லோக் சபா 39 தொகுதிகளிலும், சட்டசபை 23 தொகுதிகளிலும் ஜெயிக்கணும்ன்னு ஸ்டாலின் சொன்னதை எப்படி பார்ப்பீங்க?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X