மோடி - அமித்ஷா 3வது நாளாக ஆலோசனை| Dinamalar

மோடி - அமித்ஷா 3வது நாளாக ஆலோசனை

Updated : மே 30, 2019 | Added : மே 30, 2019 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி : மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது குறித்து பிரதமர் மோடியுடன், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பா.ஜ., தலைவர் அமித்ஷா தொடர்ந்து மூன்றாவது நாளாக, ஆலோசித்து வருகிறார்.எண்ணிக்கை எத்தனை ? : பிரதமர் மோடி, 2வது முறையாக இன்று (மே 30) மாலை 7 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. இதில் இடம்பெற வேண்டிய

புதுடில்லி : மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது குறித்து பிரதமர் மோடியுடன், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பா.ஜ., தலைவர் அமித்ஷா தொடர்ந்து மூன்றாவது நாளாக, ஆலோசித்து வருகிறார்.



latest tamil news




எண்ணிக்கை எத்தனை ? :


பிரதமர் மோடி, 2வது முறையாக இன்று (மே 30) மாலை 7 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. இதில் இடம்பெற வேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கை, யார் யாருக்கு எந்த அமைச்சர், கேபினட்டில் இடம்பெறுபவர் யார், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை பதவி? என்பது குறித்தெல்லாம், 3 வது நாளாக அமித்ஷா மோடியுடன் ஆலோசித்து வருகிறார். பிரதமர் மோடி இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது.

பா.ஜ., இந்தமுறையும் 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளையும் இணைத்தே மந்திரி சபையை அமைக்க முடிவு செய்துள்ளது. சிவசேனா, சிரோண்மனி அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.


latest tamil news




சிவசேனா :


இந்நிலையில், சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், சிவசோனா கட்சியின் நிர்வாகி சஞ்சய் ராவத் பேட்டியளித்துள்ளார். டில்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X