இடைக்கால சபாநாயகராகிறார் கங்வார்?

Updated : மே 30, 2019 | Added : மே 30, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா இடைக்கால சபாநாயகராக மூத்த எம்.பி., சந்தோஷ் கங்வார் நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. மற்றொரு மூத்த எம்.பி.,யான மேனகா, மத்திய அமைச்சர் ஆகலாம் என்பதால், இதிலிருந்து ஒதுங்கி கொண்டார். இருவரும் 8 வது முறையாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஒருவேலை கங்குவாரும், மேனகாவும் மத்திய அமைச்சர் ஆகும்பட்சத்தில், கேரளாவில் இருந்து தேர்வாகியுள்ள கேரள
சந்தோஷ் கங்வார், சபாநாயகர்


புதுடில்லி: லோக்சபா இடைக்கால சபாநாயகராக மூத்த எம்.பி., சந்தோஷ் கங்வார் நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. மற்றொரு மூத்த எம்.பி.,யான மேனகா, மத்திய அமைச்சர் ஆகலாம் என்பதால், இதிலிருந்து ஒதுங்கி கொண்டார். இருவரும் 8 வது முறையாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவேலை கங்குவாரும், மேனகாவும் மத்திய அமைச்சர் ஆகும்பட்சத்தில், கேரளாவில் இருந்து தேர்வாகியுள்ள கேரள எம்.பி., கொடிகுன்னில் சுரேஷ் இடைக்கால சபாநாயகராக நியமிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு 16வது லோக்சபாவில் இடைக்கால சபாநாயகராக கமல்நாத் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லோக்சபாவில், மூத்த எம்.பி., ஒருவர், கட்சி பாரபட்சம் பார்க்காமல் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவார். அவர், புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். புதிய சபாநாயகர் தேர்வாகும் வரை அவையை நடத்துவார்.

உ.பி.,யில் இருந்து தேர்வான கங்வார், புதிய சபாநாயகராக தேர்வாகலாம் எனவும் யூகங்கள் வந்துள்ளன. இந்த நேரத்தில், மற்றொரு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டியநிலை அரசுக்கு ஏற்படும்.


latest tamil news




14வது லோக்சபாவின் போது, 2004 ஜூன் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சாட்டர்ஜி இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார். பின்னர். லோக்சபா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், மூத்த எம்.பி.,க்கள் பட்டியலை பார்லிமென்ட் செயலகம் தயாரித்து வருகிறது . இதில் அமைச்சராக போகும் நபர்களின் பெயர் இடம்பெறவில்லை. பட்டியலில் இருந்து இடைக்கால சபாநாயகரை பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் தேர்வு செய்யம். அவரை, இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி நியமிப்பார். என்றார்.

கங்வாரை தவிர்த்து, காங்கிரசின் கொடிகுன்னில் சுரேஷ், பா.ஜ.,வின் விரேந்திர குமார், சமாஜ்வாதியின் முலாயம் சிங், சுயேட்சை உறுப்பினர் மோகன்பாய் தேல்கர் ஆகியோர் லோக்சபாவிற்கு 7 வது முறை தேர்வாகியுள்ளனர்.பொதுவாக சபாநாயகராக, ஆளுங்கட்சி அல்லது கூட்டணி கட்சியின் மூத்த எம்.பி., தான் தேர்வு செய்யப்படுவார். இருப்பினும், முதல்முறையாக தேர்வான எம்.பி.,க்களும் சபாநாயகராக தேர்வாகியுள்ளனர். 6வது லோக்சபாவில் சபாநாயகரான பணியாற்றிய கே எஸ் ஹெக்டே, 7 வது லோக்சபா சபாநாயகராக பணியாற்றிய பல்ராம் ஜாகர் முதல்முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மே-201913:29:31 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) பொறுமையானவர்கள் நிதானமானவர்கள் தான் சபையை திறம்பட நடத்தமுடியும் , நல்லவர் வரட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X