சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 30, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: பா.ம.க., போட்டியிட்ட, ஏழு தொகுதிகளிலும், தோல்வி அடைந்து விட்டதால், இனி, அக்கட்சியால் எழ முடியாது என, ஒரு கும்பல், வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. யானை படுத்தாலும், குதிரை மட்டம் என்ற உண்மையை அறியாதது தான் அக்கூட்டம்.

டவுட் தனபாலு: சொலவடை எல்லாம், சூப்பராத் தான் இருக்கு... பிற கட்சிகள், இப்போது தான் விமர்சிக்குது... தேர்தலுக்கு முன்னமே, 'நாங்களும் நாலைந்து தேர்தல்களில் தனித்து நின்று பார்த்துட்டோம்... மக்கள் ஏற்காததால், கூட்டணியில் சேருகிறோம்'னு, திருவாய் மலர்ந்தது, உங்க மகன் அன்புமணி தானே... விழுந்தால் எழமுடியும்கற நம்பிக்கையை, முதலில் அவருக்கு அளித்தால் என்னங்கறது தான், என்னோட, 'டவுட்!'

காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: வரும் காலங்களில், 'நோட்டா' என்ற ஒன்று இருக்கக் கூடாது.

டவுட் தனபாலு: நேற்று வரைக்கும், தமிழக, பா.ஜ.,வை, அதோடு தானே ஒப்பிட்டுப் பேசி வந்தீங்க... இப்போ என்ன திடீர்னு, 'நோட்டா'வுக்கு எதிராக குரல் எழுப்புறீங்க... இதற்கு பெயர் தான், முன்னெச்சரிக்கை கோரிக்கையா என்ற, 'டவுட்' வருதே...!

கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமார்: நாங்குநேரி தொகுதிக்கு, ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, மூன்று ஆண்டுகளில் செய்துள்ளேன்.

டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதால், இதைச் சொல்றீங்க... முடிவு வேறுமாதிரி இருந்திருந்தால், மீதமுள்ள, இரண்டு ஆண்டுகளில், வெறுமனே தான் இருந்திருப்பீங்களா... நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சியினர், 'அதைச் செய்வோம்; இதைச் செய்வோம்'னு, எந்த வாக்குறுதியும் அளிக்கத் தேவையில்லையா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-மே-201918:54:51 IST Report Abuse
D.Ambujavalli ஆமாம், அப்பா பிள்ளை இருவரின் தீர்மானமும் வெவ்வேறானாலும், முடிவு தோல்வியை நோக்கித்தான் ஆனால் கட்சித் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், கட்சியே இவ்விருவர்களால் களையும் நிலை வந்துவிடுமோ என்பதுதான்
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
31-மே-201914:44:51 IST Report Abuse
Anantharaman Srinivasan யானை படுத்து குதிரை மட்டத்துக்கு வரலே. அடிசறுக்கி குப்புற விழுந்திடுச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X