பதிவு செய்த நாள் :
உறுதி!
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஜெகன்
ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்பு

விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தின் புதிய முதல்வராக, யுவஜனா ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் எனப்படும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி, 46, நேற்று பதவியேற்றார். அப்போது, அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பேன் என, அவர் உறுதி அளித்தார். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின், ஆந்திராவின் இரண்டாவது முதல்வராக, அவர் பொறுப்பேற்றுள்ளார்.

அரசு நிர்வாகம், ஊழல், ஜெகன், உறுதி, ஆந்திரா,முதல்வர், பதவியேற்பு


சமீபத்தில், லோக்சபா தேர்தலுடன், ஆந்திராவின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 175 தொகுதிகளில், ஒய்.எஸ்.ஆர்.காங்., 151 இடங்களில் வென்று அசத்தியது.


இதுவரை முதல்வராக இருந்த, சந்திரபாபு நாயுடு வின் தெலுங்கு தேசம் கட்சி, 23 தொகுதி களிலும்; பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, ஒரு தொகுதியிலும் வென்றன.மிகப் பெரிய வெற்றி பெற்ற, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தின் முதல்வராக நேற்று பகல், 12:23 மணிக்கு பதவியேற்றார்.

புறக்கணிப்புவிஜயவாடாவின். ஐ.ஜி.எம்.சி., மைதானத்தில் நடந்த விழாவில், கவர்னர், இ.எஸ்.எல். நரசிம்மன், அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.முக்கிய விருந்தினர்கள், கட்சித் தொண்டர்கள் என, ஆயிரக்கணக்கானோர், இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ்; தி.மு.க., தலைவர், ஸ்டாலின், பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.


முன்னதாக, திறந்த ஜீப்பில், தொண்டர்களின் கரகோஷத்துடன், விழா மேடைக்கு, ஜெகன் மோகன் வந்தார். இந்த விழாவை புறக்கணிப்ப தாக, இதுவரை முதல்வராக இருந்த, சந்திரபாபு நாயுடு ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவருடைய தெலுங்கு தேசம் கட்சி சார்பில், மூத்த தலைவர்கள் அடங்கிய குழு, விழாவில் பங்கேற்றது.


கடந்த, 2014ல், தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின், ஆந்திராவின் 2 வது முதல்வராக,

ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுள்ளார். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், அவர் மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள், ஜூன், 7ம் தேதி பதவியேற்க உள்ளனர்.காங்.,ஸ் மூத்த தலைவரும், ஆந்திரா வின் முன்னாள் முதல்வருமான, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, 2007ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அவருடைய மகனான, ஜெகன் மோகன் அரசியலுக்கு வந்தார்.கடந்த, 2011ல், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியை துவக்கினார்.புதிய உச்சம்முதல்வராக பதவியேற்று உள்ள, ஜெகன் மோகன் ரெட்டிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'ஆந்திர முதல்வ ராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துகள்.


மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை யும் மத்திய அரசு செய்யும். 'நாம் இணைந்து செயலாற்றி, ஆந்திராவை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்வோம்' என,வாழ்த்து செய்தியில், மோடி குறிப்பிட்டுள்ளார். காங்., தலைவர், ராகுல் உள்ளிட் டோரும், ஜெகன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


ஸ்டாலின் முதல்வராக வாழ்த்து
முதல்வராக பதவியேற்ற பின், கூடியிருந்த மக்களி டையே, ஜெகன் மோகன் ரெட்டி உரையாற்றினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்த,தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, 'விரை வில் நீங்கள் முதல்வராக வேண்டும்' என, கூறினார்.நிகழ்ச்சியில், ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:மற்ற கட்சிகளைப் போலல்லாமல், நாங்கள், இரண்டு பக்க தேர்தல் அறிக்கையை மட்டுமே வெளியிட்டோம். அது தான் எங்களுக்கு, பைபிள், குரான் மற்றும் பகவத் கீதை. அதில் கூறியுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவோம்.உங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவேன் என, உறுதி அளிக்கிறேன். முதியோருக்கான ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயில் இருந்து, 2,250 ரூபாயாக உயர்த்தும் உத்தரவே, என்னுடைய முதல் கையெழுத்தாக இருக்கும். அடுத்த ஆண்டில் இருந்து, இது, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்.மக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிக்க, 'கால் சென்டர்' அமைக்கப்படும். அதில், தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும்.அரசு நிர்வாகத்தில் உள்ள குறைகள், பிரச்னை கள் நீக்கப்படும்; ஊழல் ஒழிக்கப்படும்.ஒரு

Advertisement

ஆண்டுக் குள், இந்த துாய்மைப் பணி முடிக்கப்படும்.இவ்வாறு அவர்பேசினார்.


கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஐந்து முதல்வர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து, ஆந்திர கவர்னர், நரசிம்மன், புதிய சாதனை படைத்துள்ளார்.முன்னாள், ஐ.பி.எஸ்.,அதிகாரி யான, நரசிம்மன், முதலில் சத்தீஸ்கர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த, 2009ல் ஆந்திராவுக்கு மாற்றப்பட்டார். 2010ல் காங்., கை சேர்ந்த கிரண் குமார் ரெட்டிக்கு, ஆந்திர முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.கடந்த, 2014ல், தெலுங்கானா மாநிலம் பிரிக்கப் பட்டது. அப்போது, ஆந்திரா மற்றும் தெலுங் கானா மாநிலங்களின் கவர்னராக, அவர் நியமிக்கப்பட்டார். அப்போது, ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானாவில், சந்திரசேகர ராவுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்தாண்டு இறுதியில், தெலுங்கானா முதல்வராக, சந்திரசேகர ராவ் மீண்டும் பதவியேற்றார். அப்போதும், நரசிம் மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது, ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.


புதிய அத்தியாயம்
கடந்த, 2014ல், ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது நடந்த சட்டசபை தேர்தல்களில் வென்று, ஆந்திராவின் முதல்வராக, தெலுங்கு தேசம் தலைவர், சந்திர பாபு நாயுடு பதவியேற் றார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர், சந்திரசேகரராவ், தெலுங்கானா முதல்வரா னார். அரசியலில் இரு துருவங்களாக இரு வரும் இருந்தனர். அதனால், பிரிவினைக்கு பின், இரு மாநிலங்களிலும் பல பிரச்னைகள் ஏற்பட்டன.கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வென்று, சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வ ரானார். தற்போது, ஆந்திராவின் முதல்வராக, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுள்ளார்.பதவியேற்பு விழா வில் பங்கேற்ற, சந்திரசேகர ராவ், இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என, வலியுறுத்தினார். ஜெகன் மோகன் ரெட்டியும், தன் பேச்சில் இதை குறிப்பிட்டார்.பரஸ்பரம் இருவரும் நட்புடன் உள்ளதால், இரு மாநிலங்களுக்கு இடையே யான கசப்புணர்வு குறைந்து, தெலுங்கு மொழி பேசும் இரு மாநிலங்கள் இடையேயான நட்புறவில், புதிய அத்தியாயம் ஏற்படும் என, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mithun - Bengaluru,இந்தியா
31-மே-201920:09:13 IST Report Abuse

Mithunதமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. எப்படியும் கனி, ராசா, கார்த்திக் போன்றோர் விரைவில் சிறை செல்வார்கள். அங்கு இடைத்தேர்தல் வரும். திரும்பவும் பண பட்டுவாடா. ஒரே கொண்டாட்டம் தான் போங்க அந்த தொகுதி மக்களுக்கு.

Rate this:
Anandan - chennai,இந்தியா
01-ஜூன்-201907:33:27 IST Report Abuse

Anandanஇப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தீங்க ராஜா அந்த வழக்கை ஒன்னும் இல்லாமல் செஞ்சுட்டாரு. சும்மா கால்குலேட்டரை வைத்து கணக்கு போட்டு 1.76 லட்சம் கோடினு சொன்னவனுக்கு இவங்க பதவிக்கு வந்ததும் 2 அரசு பதவிகள் ஏன்? அடிமை சேவகம் கட்சிக்கு பார்த்ததால்தானே. என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ...

Rate this:
Anandan - chennai,இந்தியா
01-ஜூன்-201908:03:58 IST Report Abuse

Anandan1.76 லட்சம் கோடினு சொன்னவருக்கு ஆட்சி மாறியதும் இரண்டு அரசு பதவிகள் வழங்கப்பட்டது அவர் வகித்த பதவிக்கு அது முடிந்தபின் அவருக்கு எந்த அரசு பதிவையும் வழங்குவதில்லை அந்த மரபை இந்த அரசு உடைத்துள்ளது ஏன்? அப்போ அவர் கட்சி சார்பில் செயல்பட்டுள்ளாரா என்ற ஐயம் ஏற்படுகிறது. ராஜாவிற்கு சிறை நிச்சயம் என்றீர்கள் ஆனால் அவர் வழக்கில் வென்றுள்ளார். தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். ...

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
31-மே-201920:07:50 IST Report Abuse

Pannadai Pandianஇவன் ஊழலை ஒழிக்க போறானா ??? இவன் பேரில் எவ்வளவு ஊழல் வழக்குகள் உள்ளன ? அமலாக்கத்துறை எவ்வளவு சொத்தை முடக்கியது ??? பக்கத்தில் யார் இருக்கான் பாருங்க, ஊழலின் பேராசிரியர்…….அவன் அப்பன் ஊழலில் வைஸ் சான்சலர்…...ஆந்திரா உருப்படாது…...மதமாற்றம் அதிவேகமாக தொடரும்…...அப்படி தொடர்ந்தால் பாஜக ஆந்திராவில் வெகு விரைவில் காலூன்றும்….

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
31-மே-201919:46:55 IST Report Abuse

Sivaதமிழ் மக்கள் கமெண்ட் எவனாவது படிப்பானா....

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X