அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பம்
தி.மு.க.,வை சீண்டும் விளம்பரம்

தர்மபுரி: 'விவசாயக் கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்கலாம்' என, தி.மு.க., பெயரில் வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பரவி பருகிறது.

கடன் தள்ளுபடி, விண்ணப்பம், தி.மு.க., விளம்பரம்



லோக்சபா தேர்தலின் போது, 'எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால், விவசாயக் கடன், கல்விக்கடன் ரத்து செய்யப்படும்' என, காங்., தலைவர் ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தனர்.தேர்தலில், காங்., தோல்வி அடைந்தது. ஆனால், தமிழகத்தில், தி.மு.க.,

மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 37 இடங்களில் வெற்றி பெற்றன.தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.



தற்போது, சமூக வலைதளங்களில், தர்மபுரி மாவட்ட, தி.மு.க.,என்ற பெயரில் முக்கிய அறிவிப்பு என, ஒரு தகவல் பரவி வருகிறது.அதில், 'தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட வங்கிகளில், விவசாய கடன்கள் முழுவதும் தள்ளுபடியாக உள்ளது. அனைவரும், தர்மபுரி, எம்.பி.,யான டாக்டர் செந்தில்குமாரின் மருத்துவ மனைக்கு, ஜூன், 30க்குள், வங்கி லோன் கணக்கு புத்தகம், ஆதார் கார்டை எடுத்து சென்று, படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


மேலும், 10 கி.மீ.,க்கு மேற்பட்ட தொலைவில் இருந்து வரும் ஏழைகள், பயண செலவை பெற்றுக் கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement

தி.மு.க., மாவட்டச் செயலர் தங்கம் சுப்பிரமணி கூறிய தாவது:சமூக வலைதளங்களில், சில விஷமிகள் இதை பரவ விட்டுள்ளனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு மிகபெரிய வெற்றி கிடைத்துள்ளது. மத்தியில், காங்., அரசு அமையாததால், விவசாய கடன் தள்ளுபடியை, தற்காலிகமாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமையும். அப்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJPKAARAN - Coimbatore,இந்தியா
31-மே-201919:30:21 IST Report Abuse

BJPKAARANசொன்ன வாக்குறுதியை கட்சி நிதி மற்றும் சொந்த சொத்துக்களை விற்று நிறைவேற்ற வேண்டியதுதானே அப்படி நிறைவேற்றினால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் ஜெயித்து சம்பாதித்துவிடலாமே... ஐடியா எப்படி?

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-201918:38:41 IST Report Abuse

J.V. Iyer'விவசாயக் கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்கலாம்' - தி.மு.க. சொன்னபடி செய்வார் நம்ம சுடலை.

Rate this:
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
31-மே-201918:16:01 IST Report Abuse

tamilanஅட வாத்தியார்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வருங்காலவைப்பு நிதியில் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய ஸ்டாலின் வாக்குகொடுத்துள்ளார்........ ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும்.....

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X