'நோட்டீசை' ரத்து செய்யுங்கள்: ஐகோர்ட்டில் ராஜிவ் குமார் மனு

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
'நோட்டீசை' ரத்து செய்யுங்கள்: ஐகோர்ட்டில் ராஜிவ் குமார் மனு

கோல்கட்டா: 'சாரதா சிட்பண்ட்' மோசடி தொடர்பாக, மேற்கு வங்க போலீஸ் அதிகாரி, ராஜிவ் குமாரை கைது செய்ய, சி.பி.ஐ.,க்கு., ஜூலை, 10ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல்காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.விசாரணைகோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, 'சாரதா சிட்பண்ட்' நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.இது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முன்னதாக, இந்த வழக்கை, கோல்கட்டா போலீஸ் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தன.


latest tamil news



சிறப்பு விசாரணைக் குழு தலைவராக இருந்த, மூத்த போலீஸ் அதிகாரி, ராஜிவ் குமார், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை மறைத்ததாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியுள்ளது.இது தொடர்பாக, கோல்கட்டாவில், ராஜிவ் குமாரின் வீட்டில் சோதனை செய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் முயன்றனர்; அவர்கள், மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.மேலும், சி.பி.ஐ.,யை கண்டித்து, மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராஜிவ் குமாரை கைது செய்து விசாரிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. சமீபத்தில் இந்தத் தடை நீக்கப்பட்டது.எனினும், அவர், 'முன் ஜாமின் கோரி, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில், ராஜிவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., தீவிரமாக உள்ளது.

இதையடுத்து, 'ராஜிவ் குமார் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம்; அதனால், உஷார் நிலையில் இருக்க வேண்டும்' என, அனைத்து விமான நிலையங்களுக்கும், சி.பி.ஐ., எச்சரிக்கை விடுத்தது.இதற்கிடையில், விசாரணைக்காக, கடந்த, 27ம் தேதி ஆஜராகக் கோரி, ராஜிவ் குமாருக்கு, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியது.இதையடுத்து, சி.பி.ஐ.,க்கு ராஜிவ் குமார் எழுதிய கடிதத்தில், 'நான் மூன்று நாள் விடுப்பில் இருக்கிறேன். அதனால், விசாரணைக்கு ஆஜராவதற்கு, கூடுதல் அவகாசம் வேண்டும்' என, எழுதியிருந்தார்.இந்நிலையில், சி.பி.ஐ., அனுப்பியசம்மனை ரத்து செய்யக் கோரி, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், ராஜிவ் குமார் நேற்று மனு தாக்கல் செய்தார்.விடுமுறைஇந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பிரதிக் பிரகாஷ் பானர்ஜி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கூறியதாவது:சி.பி.ஐ., விசாரணைக்கு, ராஜிவ் குமார் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சி.பி.ஐ., அதிகாரிகள் முன், தினமும் மாலை, 4:00 மணிக்கு, ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும். விடுமுறை முடிந்து, உயர் நீதிமன்றம், ஜூன், 10ம் தேதி கூடுகிறது. அன்றிலிருந்து ஒரு மாதம் வரை, ராஜிவ் குமாரை, சி.பி.ஐ., கைது செய்யும்நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.ராஜிவ் குமார் தன் பாஸ்போர்ட்டை, உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
05-ஜூன்-201904:17:42 IST Report Abuse
meenakshisundaram 'எனக்கு பதிலா மம்தாவை கைது செய்யவும் ,அவர் சொன்னபடிதான் நான் செஞ்சேன் -இது எப்படி இருக்கு?நம்ம 'ராசா' மன்மோகனை காண்பிச்சாரே அதே போல?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X