முடிவில் மாற்றமில்லை: பினராயி முரண்டு

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (33)
Advertisement

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாற்றம் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.






கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி, ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அக்கட்சியின் படுதோல்விக்கு சபரிமலையில் பெண்களை அனுமதித்த விவகாரமே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.





இந்நிலையில் தோல்விக்கு பின் கூடிய கேரள சட்டசபை கூட்டத்தில், பினராயி பேசியதாவது: பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் கேரள மார்க்சிஸ்ட் என்றும் பின்வாங்காது. லோக்சபா தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை.





சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற முடிவை சுப்ரீம் கோர்ட் எடுத்தது. கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதை தான் நாங்கள் செய்தோம். எங்கள் தோல்வியை பார்த்து சிரிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இது தற்காலிகமானது; கம்யூ., மீண்டு எழும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
02-ஜூன்-201909:25:14 IST Report Abuse
A P ஜாகோபைட் சிரியன் சர்ச் விவகாரத்தில் நீண்ட நாட்களுக்கு முந்தைய உயர் நீதி மன்ற உத்தரவை கேரளா கம்யூனிஸ்ட் அரசு நடை முறை படுத்தாமல் சமீபத்திய அய்யப்பன் கோவிலுக்கான உத்தரவை மட்டும் செயல் படுத்த அரசு மிகத் தீவிரமாக முயல்கிறது என்று கேட்க , கேரளாவில் பிணராயியை பேட்டி காண T V மற்றும் பத்திரிகை ஊடகங்கள் ஏன் மறுக்கின்றன தெரியவில்லை. தயவு செய்து நமது " தினமலர் " இதற்கான பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தால் அய்யப்பனை தொழும் பக்தர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் இல்லையா ? முயற்சி செய்யுங்கள் அய்யா .
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
31-மே-201916:24:56 IST Report Abuse
J.Isaac தேர்தல் முடியவும் சவுக்கிதார் அடைமொழியை கோழைத்தனமாக நீக்கி மக்களை முட்டாள் ஆக்கிய செந்தில் சிகாமணி அவர்களே உத்தரவு போட்ட உச்ச நீதி மன்றத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லையே. மதத்தை வைத்து அரசியல செய்து தேர்தலில் ஜெயிக்கலாம் என முயற்சித்தீர்கள்.உங்கள் மாய்மாலம் மலையில் உள்ள அய்யப்பனுக்கும் பிடிக்கல. நகரத்தில் உள்ள அய்யப்பன்களுக்கும் பிடிக்கல. அதினால் தான் படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் ஒரு சீட் கூட பிஜேபிக்கு கிடைககவில்லை.
Rate this:
Share this comment
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
31-மே-201918:30:21 IST Report Abuse
Dr.T.Senthilsigamaniஜாகோபைட் சிரியன் சர்ச் விவகாரத்தில் உங்களின் தைரியம் எங்கே? மற்றபடி இதில் ஹிந்து தெய்வம் அய்யப்பனை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து...
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
07-ஜூன்-201913:27:47 IST Report Abuse
anandமதத்தை வைத்து அரசியல் செய்வதை சொல்லி கொடுத்தவர்கள் கிறிஸ்தவர்கள் தான்,..,உங்களை விட எங்களுக்கு அதிகம் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
31-மே-201913:48:58 IST Report Abuse
Idithangi அப்போ அந்த கேரளா சர்ச் விவகாரத்திலேயும் கோர்ட் தீர்ப்பை அமல் படுத்த தயாராகிவிட்டார் கேரளா முதல்வர். நீங்க வேணா பாருங்க தமிழ்நாட்டு திராவிட டுமிழர் தி க தி மு க போன்ற எல்லாரும் சற்குணம் உட்பட கேரளா முதல்வரை ஆதரிக்க போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X