முடிவில் மாற்றமில்லை: பினராயி முரண்டு| Dinamalar

முடிவில் மாற்றமில்லை: பினராயி முரண்டு

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (33)
Share

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாற்றம் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.



latest tamil news



கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி, ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அக்கட்சியின் படுதோல்விக்கு சபரிமலையில் பெண்களை அனுமதித்த விவகாரமே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில் தோல்விக்கு பின் கூடிய கேரள சட்டசபை கூட்டத்தில், பினராயி பேசியதாவது: பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் கேரள மார்க்சிஸ்ட் என்றும் பின்வாங்காது. லோக்சபா தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை.


latest tamil news



சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற முடிவை சுப்ரீம் கோர்ட் எடுத்தது. கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதை தான் நாங்கள் செய்தோம். எங்கள் தோல்வியை பார்த்து சிரிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இது தற்காலிகமானது; கம்யூ., மீண்டு எழும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X