எச்4 விசா முறையை எதிர்த்து தீர்மானம்

Added : மே 31, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

வாஷிங்டன்: இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படும், எச்4 விசாவில் உள்ளோரின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையிலான, அமெரிக்க அரசின் திட்டத்தை எதிர்த்து, இரண்டு, எம்.பி.,க்கள், பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.



latest tamil news




அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெற்றுள்ளோரின் மனைவி அல்லது கணவருக்கு, எச்4 விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெற்றுள்ள வர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த வகையில், இந்த எச்4 விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.


ஒரு லட்சம் இந்தியர்கள்:



அமெரிக்க அரசின் புள்ளி விபரங்களின்படி, ஒரு லட்சம் இந்தியர்கள், எச்4 விசா பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தற்போது அதிபராக உள்ள, டொனால்ட் டிரம்ப் அரசு, அமெரிக்கர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி வருகிறது. அதன்படி, எச்4 விசா உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அமெரிக்காவில் வேலை பார்க்கும், ஒரு லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


latest tamil news





ஆதரவு:



இந்நிலையில், எச்4 விசா பெற்றுள்ளோருக்கான வேலை வாய்ப்பை பாதுகாக்கும் வகையில், அமெரிக்க, எம்.பி.,க்கள், அன்னா ஈஷு மற்றும் ஜோ லோப்கிரன், பார்லி.,யில் தீர்மானம் கொண்டு வந்து உள்ளனர்.'எச்4 விசா பெற்றுள்ளவர்கள், நன்கு படித்தவர்களாகவும், வேலை திறன் பெற்றவர்களாகவும் உள்ளனர். அவர்களுடைய சேவையை, நாடு இழந்து விடக் கூடாது. 'அதனால், எச்4 விசா பெற்றுள்ளோருக்கான வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கக் கூடாது' என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு, பெரும்பாலான, எம்.பி.,க் கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதனால், இந்தியர்களின் வேலைவாய்ப்பு பறிபோவது தடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
31-மே-201913:21:48 IST Report Abuse
Nallavan Nallavan அவர்கள் நாடு ..... அவர்கள் உரிமை .....
Rate this:
Share this comment
Cancel
Adhithyan - chennai,இந்தியா
31-மே-201908:20:37 IST Report Abuse
Adhithyan இதை தடுக்க முடியாது ...H4 விசா ஒழிக்கபட வேண்டும் அமெரிக்காவில் பிறந்த அந்த ஊரு குடிமக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் அதிபர் டிரம்ப் திட்டம். இதை தடுக்க முடியாது ...வாழ்க டிரம்ப் வெல்க டிரம்ப்
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
31-மே-201906:56:41 IST Report Abuse
கதிரழகன், SSLC ஆமா அங்க ஆயா வேலை, ஓட்டல்ல சர்வர் வேலை, கூட்டி கழுவி பெருக்கி மொளுகி கூலி வேலை செஞ்சுட்டு இங்கிட்டு வந்து பாரின் பந்தா காட்டறது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X