பதவி இழந்த முக்கிய தலைவர்கள்

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற ஜெட்லி, சுஷ்மா, நட்டா, உமாபாரதி உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை.ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த கோலாகலமான விழாவில் மோடி பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடி அமைச்சரவையில் 57
பிரதமர் மோடி, அமைச்சரவை, இலாகா,

புதுடில்லி: பிரதமர் மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற ஜெட்லி, சுஷ்மா, நட்டா, உமாபாரதி உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த கோலாகலமான விழாவில் மோடி பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடி அமைச்சரவையில் 57 பேர் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில், கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற சிலர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அவர்களின் விவரம்


அருண் ஜெட்லி

கடந்த ஆட்சியில் நிதி அமைச்சர் பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி கடந்த 18 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், புதிய அமைச்சரவையில் தனக்கு இடமளிக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பல முக்கிய பொருளாதார சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற காரணமாக இருந்த அவர், அரசின் கொள்கை முடிவுகளை ஆதரித்து பேசி எதிர்க்கட்சிகளை வாயடைக்க செய்தார். 2014 ல் பதவியேற்ற போது, சில நாட்கள், ஜெட்லி, பாதுகாப்பு, நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகங்களை கவனித்தார். பின்னர் நிதித்துறையை மட்டும் கவனித்து வந்தார். 66 வயதாகும் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றதால், கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்யவில்லை.


latest tamil news





சுஷ்மா சுவராஜ்


கடந்த ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்தார். பா.ஜ., அரசில் அவர் முதல்முறையாக இடம்பெறவில்லை. 67 வயதாகும் சுஷ்மா சமூக வலைதளங்களில் பிரபலமான அமைச்சராக இருந்தார். அதன் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, தேவையான நபர்களுக்கு உதவிகளை செய்து வந்தார். இந்த தேர்தலில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடவில்லை.


latest tamil news


Advertisement




உமாபாரதி


உமாபாரதி, கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி மற்றும் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் கவனம் செலுத்த போவதால், தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தார். கடந்த ஆட்சியில் முதலில் கங்கை நதி மீட்பு மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். பிரதமர் மோடியின் முக்கிய திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி மெதுவாக நடந்தது. இதனையடுத்து அவரது இலாகா மாற்றப்பட்டு குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் பா.ஜ., துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.


latest tamil news




மேனகா


கடந்த ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சராக இருந்த மேனகா இந்த முறை பதவி வழங்கப்படவில்லை.


latest tamil news





சுரேஷ் பிரபு


கடந்த ஆட்சியில், முதலில் ரயில்வேத்துறை அமைச்சராகவும், பின்னர் வணிகம், தொழில்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சிவசேனாவில் இருந்த சுரேஷ் பிரபு, பின்னர் பா.ஜ.,விற்கு மாறினார். அவரை ராஜ்யசபா எம்.பி., ஆக்கிய மத்திய அமைச்சராக, மோடி நியமித்தார். அமைதியாக பேசும் குணம் கொண்ட சுரேஷ் பிரபு, சீர்திருத்தங்களுக்கு ஆதரவானவர். அவர், இந்த முறை அமைச்சரவையில் இடம்பெறாதது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news





ராதாமோகன் சிங்

விவசாயத்துறை அமைச்சராக இருந்த ராதாமோகனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. பீஹாரின் பூர்வி தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் அமைச்சராக இருந்த போது தான், ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பிரச்னைகளை சந்திக்கும் விவசாயத்துறையை அவர் கவனிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news





ஜேபி நட்டா


கடந்த ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த நட்டா, பா.ஜ., தலைவர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமையான தலைவராக கருதப்படும் அவரது தலைமையில் மே.வங்கம், மஹாராஷ்டிரா, டில்லி சட்டசபை தேர்தல்களை பா.ஜ.,மேற்கொள்ள உள்ளது.


latest tamil news





ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்


முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவரான ரத்தோர், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் புறநகர் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்


latest tamil news





ஜெயந்த் சின்ஹா


நிதி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சராக இருந்த ஜெயந்த் சின்ஹாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாக் தொகுதி எம்.பி.,யான அவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஆவார்.


latest tamil news





மனோஜ் சின்ஹா


கடினமாக உழைப்பவர் என பெயர் பெற்ற மனோஜ் சின்ஹா, கடந்த ஆட்சியில் ரயில்வே துறை இணை அமைச்சராக பணியாற்றினார். லோக்சபா தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால், அவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.


latest tamil news





அனுபிரியா படேல்

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பதவி வகித்த அனுபிரியா படேல், கடந்த ஆட்சியில் சிறப்பாக பணியாற்றவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. அவரது கட்சி இரண்டு தொகுதிகளில் வென்ற போதிலும், இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


latest tamil news





கேஜே அல்போன்ஸ்


தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வகித்து வந்த அல்போன்ஸ், கேரள மாநிலம் எர்ணாகுளம் தொகுதியில் தோல்வியடைந்தார். அங்கு 3வது இடத்தையே தான் அவர் பிடிக்க முடிந்தது.


latest tamil news




இவர்களை தவிர கடந்த ஆட்சியில் இடம்பெற்ற விஜய் கோயல், மகேஷ் சர்மா, எஸ்எஸ் அலுவாலியா, ரமேஷ் ஜிஜாஜிங்கி, ராம் கிர்பால் யாதவ், ஆனந்த் குமார் ஹெக்டே, சத்யபால் சிங், ஜூவல் ஓரம் ஆனந்த் கீதா ஆகியோரும் இந்த முறை இடம்பெறவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Ayyappan - chennai,இந்தியா
03-ஜூன்-201913:24:06 IST Report Abuse
C.Ayyappan ,இங்கே சில பேர் எங்களுக்கு பதவி வேண்டாம் என்றவர்கள்
Rate this:
Cancel
BOBBTY - Chennai,இந்தியா
01-ஜூன்-201912:20:29 IST Report Abuse
BOBBTY திரு. அருண் ஜேட்லி அவர் தம் விருப்பத்தின் படியே மந்திரி பதவி KODUKKAVILLAI. (உடல் நலன் கருதி )பதவியின் மேல் அவருக்கு ஆசை ILLAI.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
31-மே-201920:04:34 IST Report Abuse
Rpalnivelu இதென்ன கட்டுமர kitchen கேபினெட்டா, எல்லா குடும்ப சிபாரிசுக்கெல்லாம் அமைச்சர பதவி கொடுத்துக் கொண்டிருப்பதற்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X