அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் அளிக்காதது ஏன்?

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement

புதுடில்லி: நேற்று (மே 30) பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற 58 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையில் தமிழகத்தில் கூட்டணியில் இருக்கும் அதிமுக.,விற்கு இடம் அளிக்கப்படவில்லை.latest tamil news


லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணி கட்சியான அதிமுக.,வை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். தேனி மாவட்டத்தில் காங்., வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வீழ்த்தி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிமுக-பா.ஜ., கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் என்பதால் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தலுக்கு முன்பே மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என ஓபிஎஸ் கூறி வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிமுக.,வில் முதல்வர் பழனிசாமி தரப்பில் இருந்து ராஜ்யசபா உறுப்பினரான வைத்திலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் ரவீந்திரநாத் பெயரும், இபிஎஸ் தரப்பில் வைத்தியலிங்கம் பெயரும் பரிந்துரை செய்து, அழைப்பு வரும் என டில்லியில் முகாமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


இருவரில் யாருக்காவது ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடன் இருந்துள்ளனர். இதற்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வருமாறு ரவீந்திரநாத்திற்கு போனில் அழைப்பு வந்துள்ளதாக தகவல் பரவியது. ஆனால் ரவீந்திரநாத் இதனை மறுத்தார். ஆனால் கடைசி வரை இருவரில் ஒருவரை கூட பிரதமர் அழைக்கவில்லை.
இது குறித்து பா.ஜ., தலைவர் ஒருவர் கூறுகையில், இது பிரதமரின் முடிவு. வைத்திலிங்கம் அழைக்கப்படுவார் என நாங்கள் நம்பினோம். ஆனால் அவ்வாறு செய்தால் அதிமுக.,விற்கு பிரச்னை ஏற்படும் என்பதால் யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லாமல் போனதும், அடிக்கடி உரசல் ஏற்பட்டு வந்ததும் தான் பா.ஜ.,விற்கு அதிமுக மீது நம்பிக்கை இல்லாமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதே சமயம், இபிஎஸ் தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என நினைத்து அதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதே தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஒரு இடம் கூட கிடைக்காததற்கு காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது.


latest tamil news


தமிழகத்தில் இந்த முறை காலூன்றி விடலாம் என்ற நம்பிக்கையில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.,விற்கு தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் அதிமுக தலைமை மீது பா.ஜ., தலைமை அதிருப்தியில் இருந்த சமயத்தில், மத்திய அமைச்சர் பதவி விவகாரத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதல், மத்திய அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இபிஎஸ்-ஓபிஎஸ் இவர்களில் யாருக்கு சாதகமாக முடிவு எடுத்தாலும் அது அதிமுக.,வில் பிளவை ஏற்படுத்தும். இது திமுக - காங்., கூட்டணிக்கு சாதகமாக அமைந்து விடும் என பா.ஜ., கணக்கு போட்டதாலேயே தமிழகத்தில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்காமல் இருந்ததற்கு அடிப்படை காரணம் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-201918:32:38 IST Report Abuse
J.V. Iyer தமிழ் மக்களுக்கு புத்தி வரட்டும், முதலில். அவர்களுக்கு பாஜக வேண்டாம்.. தண்ணீர் வேண்டாம், ஹிந்தி வேண்டாம். படிப்பு வேண்டாம், வேலை வேண்டாம்... அவர்களுக்கு வேண்டியது தேர்தலில் பிரியாணி, பணம், குவாட்டர். டிவி யில் எப்போதும் சீரியல் பார்க்கவேண்டும். கார்த்தியுடன் சீரியல் கதைகளை விவாதம் செய்யலாம். காத்திருக்கிறார். உங்கள் MP அல்லவா???
Rate this:
Cancel
31-மே-201916:25:53 IST Report Abuse
henry trichy மூடர் கூடத்தை நம்பி ஏடா கூடாமாகிப் போனோமே பராபரமே!
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மே-201916:18:07 IST Report Abuse
Endrum Indian திராவிட கட்சிகள் ஒழியவேண்டும், டாஸ்மாக் கடைகள் மூடப்படவேண்டும், அன்று தான் டாஸ்மாக் நாடு தமிழ்நாடு என்று ஆகி ஒளிர ஆரம்பிக்கும், அதுவரை டாஸ்மாக் நாடு கல்லறையில் தான் இருக்கும் மேலே வராமல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X