அமைச்சர்களின் இலாகா அறிவிப்பு

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (25)
Advertisement
மத்திய அமைச்சர், இலாகா

புதுடில்லி: மத்திய அமைச்சர்களின் இலாகாக்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு உள்துறையும், ராஜ்நாத்திற்கு பாதுகாப்புத் துறையும், நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று ( மே 30) நடந்த கோலாகலமான விழாவில், மோடி, 68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட, மொத்தம், 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்கள் என 58 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சர்களுக்கான இலாக்கா விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நரேந்திர மோடி, பிரதமர் பொறுப்பு தவிர தொழிலாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்சன் துறை, முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் அணுசக்தி துறை, விண்வெளி துறைகளை கவனிப்பார். அமித்ஷா வுக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா - நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத்துறை அமைச்சரகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பியூஸ் கோயல் மீண்டும் ரயில்வேத்துறை அமைச்சராகியுள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்துறையையும் கவனிப்பார். குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. சதானந்தா கவுடா, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராம்விலாஸ் பஸ்வானுக்கு மீண்டும் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நரேந்திர சிங்க தோமர், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக பஞ்சாயத்து, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத்துக்கு மீண்டும் சட்டம், நீதித்துறை, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நிதின் கட்கரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் . சிறு, குறு நடுத்தர வர்த்தகத்துறையையும் அவர் கவனிப்பார். ஹர்ஷவர்தனுக்கு, சுகாதாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மேந்திர பிரதானுக்கு பெட்ரோலியத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இரும்புத்துறையையும் அவர் கவனிப்பார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக மீண்டும் முக்தர் அபாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார். பழங்குடியினர் நலத்துறை அர்ஜூன் முண்டாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரலகத் ஜோஷி பார்லிமென்ட் விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகியுள்ளார். மகேந்திரநாத் பாண்டேவுக்கு திறன் மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கிரண் ரிஜூஜூநியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ் பொக்ரியால் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார். தவாரர் சந்த் கேலாட் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை அமைச்சராகவும், கஜேந்திர சிங் - ஜல் சக்தி துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி,
ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு
அமித்ஷா - உள்துறை
நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு நடுத்தர வர்த்தகத்துறை
சதானந்தா கவுடா- ரசாயனம் மற்றும் உரத்துறை
நிர்மலா சீதாராமன் - நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
ராம்விலாஸ் பஸ்வான் - நுகர்வோர் விவகாரம், மற்றும் உணவு பாதுகாப்புத்துறை
நரேந்திர சிங் தோமர் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக பஞ்சாயத்து, பஞ்சாயத்துராஜ் துறை
ரவிசங்கர் பிரசாத்- சட்டம் மற்றும் நீதித்துறை, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை
ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்ததல்
தவார் சந்த் கேலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை,
ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
அர்ஜூன் முன்டா - பழங்குடியினர் நலன்
ரமேஷ் போக்ரியால்- மனித வளத்துறை
ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், ஜவுளித்துறை
ஹர்ஷவர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல்
பிரகாஷ் ஜவடேகர்- வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், தகவல் மற்றும் தொடர்புத்துறை
பியுஸ் கோயல் - ரயில்வேத்துறை ,வர்த்தகம் மற்றும் தொழில்துறை
தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியத்துறை, இரும்புத்துறை
முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலன்
பிரலகத் ஜோஷி - பார்லிமென்ட் விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாட்டுத்துறை


அரவிந்த் சாவந்த் - கனரக தொழில்துறை

கிரிராஜ் சிங் - கால்நடை மீன்வளத்துறை
கஜேந்திர சிங்- நீர்வளத்துறை


இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு


சந்தோஷ் கேங்வார் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியல் துறை
ஸ்ரீபாத் நாயக் - ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்தவம், யுனானி, சித்தா, ஓமியோபதி துறை மற்றும் பாதுகாப்புத்துறை
ஜிதேந்திர சிங் - வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, பிரதமர் அலுவலகம், தனிநபர் பயிற்சி, பொது மக்கள் குறைதீர்ப்பு, பென்சன் துறை , அணுசக்தி துறை, விண்வெளித்துறை,
கிரண் ரிஜூ- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை
பிரகலாத் படேல் - கலாசாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை
ஆர்.கே.சிங் - மின்சாரத்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு.
ஹர்தீப் சிங் புரி - வீட்டுவசதி, நகரமைப்புத்துறை, விமான போக்குவரத்து துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை
மான்சுக் மான்டவியா - கப்பல் போக்குவரத்து துறை, உரம் மற்றும் ரசாயனம் துறை
இணை அமைச்சர்கள்பகன் சிங் குலஸ்தே- இரும்புத்துறை
அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
அர்ஜூன் ராம் மேஹ்வால் - பார்லிமென்ட் விவகாரம் மற்றும் கனரக தொழில்துறை
வி.கே.சிங்- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
கிருஷ்ணன் பால் குஜார் - சமூக நீதித்துறை
ராவ்சாகிப் தான்வி- நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை
கிசன் ரெட்டி- உள்துறை
பரிசோத்தம் ரூபலா - விவசாயத்துறை
ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி
நிரஞ்சன் ஜோதி- ஊரக வளர்ச்சித்துறை
பபுல் சுப்ரியோ- சுற்றுச்சூழல்துறை
சஞ்சீவ் பல்யான்- கால்நடை, மீன்வளத்துறை
அனுராக் தாகூர்- நிதி, கார்ப்பரேட் துறை
சஞ்சய் சாம்ராவ்-மனித வளம், தொலைதொடர்புத்துறை
அங்காடி சுரேஷ் - ரயில்வேத்துறை
நித்யானந்த ராய்- உள்துறை
ரத்தன் லால் கட்டாரியா - நீர்வளத்துறை, சமூக நீதித்துறை
முரளிதரன் - வெளியுறவுத்துறை, பார்லிமென்ட் விவகாரத்துறை
ரேணுகா சிங் - பழங்குடியினர் நலத்துறை
சோம் பிரகாஷ்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
ராமேஷ்வர் டெலி - உணவு பதப்படுத்துதல் துறை
பிரதாப் சந்திர சாரங்கி - சிறு குறு தொழில்
கைலாஷ் சவுத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
தீபாஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
01-ஜூன்-201900:16:17 IST Report Abuse
Ramakrishnan Natesan ஏன் கடலை மிட்டாய்க்கு வரி என்றதிருக்கும் ஹோட்டலுக்கு ஏன் GST என்றதிற்கும் விளக்கம் சொன்ன அம்மணி நிதி மந்திரி விளங்கிடும் நாடு
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
01-ஜூன்-201911:19:27 IST Report Abuse
Chowkidar NandaIndiaவரி மந்திரியாரின் திறமையால் கிலோ பருப்பு விலை நாற்பது ரூபாயிலிருந்து 200 ரூபாய் என ஆனதும், காய்கறிகளின் விலை கிலோ 100 ரூபாய் என அமோக வளர்ச்சி(?) பெற்றதும் அன்னாரின் சாதனைகள் தானே....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
01-ஜூன்-201900:14:11 IST Report Abuse
Ramakrishnan Natesan அமித் ஷா உள்துறை மந்திரி கடவுளே மத கலவரம் வராமல் நாட்டை காப்பாற்று
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
01-ஜூன்-201911:14:15 IST Report Abuse
Chowkidar NandaIndiaஷிஷில் குமார் ஷிண்டே உள்துறை மந்திரியாக இருந்தபோது நாடு மிகவும் அமைதியாக, கலவரமே இல்லாமல் அல்லவா இருந்தது. கடவுளே முதலில் இப்படிப்பட்டவர்களை நல்வழிப்படுத்து....
Rate this:
Share this comment
Cancel
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
31-மே-201917:00:18 IST Report Abuse
tamilan கருணாநிதி காலத்தில் ஊழல் செய்ய வசதியான துறைகளை போராடி, இடைதரகர்கள் மூலம், லஞ்சம் கொடுத்து பெற்று கொள்ளையடிப்பார்..... ஆனால் மோடி திறமை தகுதி அடிப்படையில் பதவி கொடுத்துள்ளது வரவேற்கதக்கது.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X