‛தலை'க்கு அழைப்பில்லை: விழாவை புறக்கணித்த திமுக

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (77)
Advertisement
புதுடில்லி : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படாததால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் திமுக எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர்.மேற்குவங்க முதல்வர் மம்தாவிற்கு அழைப்பு அனுப்பியும், அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். ஆனால் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. திமுக எம்பிக்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தலைவருக்கு

புதுடில்லி : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படாததால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் திமுக எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தாவிற்கு அழைப்பு அனுப்பியும், அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். ஆனால் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. திமுக எம்பிக்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தலைவருக்கு அழைப்பு இல்லாததால் அக்கட்சி எம்.பி.,க்கள் விழாவை புறக்கணித்துள்ளனர். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு அனுப்பப்படாததால் ஸ்டாலினும், ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார்.



latest tamil news


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ., கூட்டணியில் தலா ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதே சமயம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக 38 லோக்சபா தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றியது.
திமுக.,விற்கு அழைப்பு அனுப்பப்படாதது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் அவர்களிடம் அழைப்பை எதிர்பார்க்கவில்லை. பதவியேற்பு விழாவிற்கு அனைத்து எம்.பி.,க்களையும் அழைக்க வேண்டும் என்பது முறை. ஆனால் எங்களுக்கு தமிழ்நாடு இல்லத்திற்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. தனியாக யாருக்கும் அழைப்பு அளிக்கப்படவில்லை என்றார்.


latest tamil news


அதே சமயம் தமிழகத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு அவர் கலந்து கொண்டனர். திரிணாமுல், திமுக.,வை போன்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
06-ஜூன்-201900:51:50 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI kollaikarargalukkum vuzhalkarargalukkum thalaivanukku edhukku azhaippu
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-ஜூன்-201910:41:52 IST Report Abuse
RajanRajan அததுக்குன்னு ஒரு தராதரம் கூறுகள் இருக்கே. உன்கிட்ட அது எதுவும் இல்லை. அதனாலே நீ அந்த வேலைக்கு எல்லாம் சரிபட்டு வர மாட்டே. ஓடி போய்டு.
Rate this:
Cancel
விவசாயி - Tiruppur,இந்தியா
03-ஜூன்-201916:21:04 IST Report Abuse
விவசாயி செந்தில் சிகாமனி அவர்களே கோமாளியை பார்க்க கூட்டம் கூடத்தான் செய்யும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X