புதுடில்லி : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படாததால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் திமுக எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தாவிற்கு அழைப்பு அனுப்பியும், அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். ஆனால் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. திமுக எம்பிக்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தலைவருக்கு அழைப்பு இல்லாததால் அக்கட்சி எம்.பி.,க்கள் விழாவை புறக்கணித்துள்ளனர். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு அனுப்பப்படாததால் ஸ்டாலினும், ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ., கூட்டணியில் தலா ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதே சமயம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக 38 லோக்சபா தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றியது.
திமுக.,விற்கு அழைப்பு அனுப்பப்படாதது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் அவர்களிடம் அழைப்பை எதிர்பார்க்கவில்லை. பதவியேற்பு விழாவிற்கு அனைத்து எம்.பி.,க்களையும் அழைக்க வேண்டும் என்பது முறை. ஆனால் எங்களுக்கு தமிழ்நாடு இல்லத்திற்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. தனியாக யாருக்கும் அழைப்பு அளிக்கப்படவில்லை என்றார்.

அதே சமயம் தமிழகத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு அவர் கலந்து கொண்டனர். திரிணாமுல், திமுக.,வை போன்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE