சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்'தனபாலு

Added : மே 31, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்'தனபாலு

காங்., மூத்த தலைவர் தருண் கோகோய்: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில், ராகுல் உறுதியாக உள்ளார். அவருடைய ராஜினாமாவை ஏற்க முடியாது என்பதில், நாங்களும் உறுதியாக உள்ளோம்.

டவுட் தனபாலு: இப்படியே ஆளாளுக்கு வீம்பு பிடித்தால், இந்த விவகாரம், இழுத்தபடியே இருக்கும்... 'கனத்த மனதோடு, ராகுலின் ராஜினாமாவை வரவேற்கிறோம்'னு, யாராவது குரல் கொடுத்துப் பாருங்கள்... அப்புறம், 'கட்சியினர் வற்புறுத்தலால், முடிவை மறுபரிசீலனை செய்கிறேன்'னு, ராகுல் தரப்பில் இருந்து, அறிவிப்பு வரும்என்பதில், 'டவுட்'டேவேண்டாம்...!


அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன்: லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைக்காததால் தான்,குறைவான ஓட்டுகள்பெற்றோம் என்பதை, ஏற்க முடியாது. ஆனால், எங்கள்ஓட்டுகள் எங்கு சென்றனஎன்பதை, விசாரித்துவருகிறோம்.

டவுட் தனபாலு: பலமுறை தேர்தல் களத்தில் போட்டியிட்ட கட்சிகள் தான், இதைச் சொல்லணும்... நீங்க, முதல்முறையாகத் தானே தேர்தலைச்சந்தித்தீங்க... அப்புறம் எப்படி,உங்களுக்கு இவ்வளவுஓட்டுகள் இருக்கு என்றகணக்குக்கு வந்தீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'


காங்., - எம்.பி., சசி தரூர்: பா.ஜ.,வினர் தங்கள் விற்பனை பொருள் மோடி என, முன்பே முடிவு செய்து, அதை சந்தையில் சரியாக விற்றுள்ளனர்.

டவுட் தனபாலு: ராகுல், விலைபோகாத சரக்கு என்பதைத் தான், இப்படிச் சுத்தி வளைத்து குத்திக் காட்டுறீங்களா... ஏன் இந்த, 'டவுட்'னா, 'தோற்ற அணியில், சதம் அடித்த வீரனைப் போல் உணர்கிறேன்'னு, ஆரம்பித்து, சமீபநாட்களாக, உங்களின் கருத்துகளில் எல்லாம், ஒரு, பொடி நெடி வீசுதே... அதனால் தான் கேட்டோம்...!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜூன்-201918:41:41 IST Report Abuse
D.Ambujavalli ஏன், தி மு க எம்பிக்களெல்லாம் ராஜினாமா என்று கலைஞரிடம் கடிதம் கொடுத்த நாடகம் எல்லாம் அரங்கேறவில்லையா? எல்லாக் கட்சியிலும் தலைவராக இருப்பவர் 'ஆஹா, நானே தோல்விக்குப் பொறுப்பேற்று விலகுகிறேன்' என்று வசனம் பேசுவதும் ஏதோ கட்சியின் கடைக்கோடித் தொண்டன் வரை 'போகாதே போகாதே என் தலைவா' என்று கதறியது போலவும் சீன் போட்டு மீண்டும் உட்காருவதும் புளித்துப்போன பழங்காட்சிகள்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X