பொது செய்தி

தமிழ்நாடு

கலியுக வள்ளல் மகாராஜன் பாபு

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
தலைவாசல்: கிராம மக்கள், குடிநீர் கிடைக்காமல், மயங்கி விழுந்ததைப் பார்த்த, இறைச்சிக் கடைக்காரர், தான் விவசாயத்துக்காக போட்ட, 'போர்வெல்'லில் இருந்து, மக்களின் தாகம் தீர்க்க, இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார். அவரை, 'தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிய, மகராஜன்' என, சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி மக்கள் பாராட்டுகின்றனர்.சேலம் மாவட்டம், தலைவாசலில், ஊனத்துார் ஊராட்சி உள்ளது.
 கலியுக வள்ளல் மகாராஜன் பாபு

தலைவாசல்: கிராம மக்கள், குடிநீர் கிடைக்காமல், மயங்கி விழுந்ததைப் பார்த்த, இறைச்சிக் கடைக்காரர், தான் விவசாயத்துக்காக போட்ட, 'போர்வெல்'லில் இருந்து, மக்களின் தாகம் தீர்க்க, இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார். அவரை, 'தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிய, மகராஜன்' என, சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி மக்கள் பாராட்டுகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலில், ஊனத்துார் ஊராட்சி உள்ளது. மாவட்டத்தின் கடைக்கோடி ஊராட்சியான இங்கு, 1,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2013ல், அப்போதைய, ஊராட்சி செயலர் சக்திவேல், லஞ்சப் புகாரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதனால், ஐந்து ஆண்டுகளாக, வேப்பநத்தம், வரகூர் ஊராட்சி செயலர்கள், மாறி மாறி, பொறுப்பு வகிக்கின்றனர். விழுப்புரம் மாவட்ட எல்லையை ஒட்டிய வனப்பகுதியான இக்கிராமத்தில், பிப்ரவரி முதல், தண்ணீர் தட்டுப்பாடு தலைத்துாக்கியது.
ஊராட்சியின், சிறுமின்விசை பம்புகள், ஆழ்துளை குழாய் கிணறுகள் வற்ற, தனியார் விளைநிலங்களில் உள்ள கிணறுகளை நாடிச் செல்ல வேண்டிய நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டனர்.வனப்பகுதி கிணற்றில் இருந்து, ஊருக்குள் உள்ள, மேல்நிலை தொட்டிக்கு, குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வழியில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள், முறைகேடாக இணைப்பு கொடுத்து, நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால், ஊனத்துார் வறட்சியின் பிடியில் சிக்கியது.

அதே பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 36; கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதோடு, இறைச்சிக் கடை நடத்துகிறார். சொந்தமாக, 65 சென்ட் நிலமிருந்தும், தண்ணீர் வசதி இல்லாததால், விவசாயம் செய்யாமல் இருந்தார்.மார்ச்சில், 400 அடி ஆழத்துக்கு, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தார். அதில், தண்ணீர் கிடைத்ததால், முதலில், கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடிவு செய்தார். இதன்படி, கிராம மக்களுக்கு, இலவசமாக தண்ணீர் வினியோகிக்கிறார்.
ஊனத்துார் மக்கள் கூறியதாவது:தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, கிராமச் சபை கூட்டம், பி.டி.ஓ., என, அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், பலன் கிட்டவில்லை. பிப்ரவரி முதல், கடும் குடிநீர் திண்டாட்டம் ஏற்பட்டது. ஆரம்பத்தில், தனியார் விளைநிலத்தில் உள்ள கிணறுகளில், தண்ணீர் எடுக்க, சிலர் அனுமதித்தனர்.வறட்சி அதிகரிக்க, அவர்களும் நிறுத்தி விட்டனர். ஆனால், பாபு வீட்டில், ஒட்டுமொத்த கிராமமே தண்ணீர் எடுக்கிறது. இரு மாதங்களாக, முகம் சுளிக்காமல், இலவசமாக வினியோகிக்கிறார். அரசு அதிகாரிகள் செய்ய முடியாததை, இந்த, 'மகராஜன்' பாபு செய்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பாபு கூறியதாவது:விவசாயம் செய்யவே, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தேன். முதியோர், தண்ணீரின்றி தள்ளாடி, மயங்கி விழுந்தது பார்க்க, பரிதாபமாக இருந்தது. இதனால், 1.50 லட்சம் ரூபாய் செலவு செய்த நிலையில், மக்கள் பிடித்து செல்லட்டும் என, தண்ணீர் வினியோகிக்கிறேன். காலை, 5:00 முதல், 10:00 மணி, மதியம், இரண்டு மணி நேரம், மாலையில் இருந்து இரவு வரை என, மோட்டார் இயங்கியபடியே இருக்கும். 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு என்பதால், குறிப்பிட்ட நேரம், மின் மோட்டார் நிறுத்தப்பட்டு, இயக்குகிறேன். தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை, ஊருக்காகவே தண்ணீர். பின் தான், விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

பாபுவை பாராட்ட, 88705 37800 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


முறைகேடு இணைப்புவிரைவில் துண்டிப்பு

'ஊனத்துார் ஊராட்சி செயலர் மணிமாறன் கூறியதாவது:கிராமத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை குழாய் கிணறுகளும், வறண்டு விட்டன. மாவட்டத்தின் கடைகோடி கிராமம் என்பதால், மேட்டூர் காவிரி நீர் வினியோகமும், சரிவரக் கிடைக்கவில்லை. தனியார் கிணறுகளில் இருந்து, குடிநீர் வினியோகிக்க பேச்சு நடக்கிறது.வனப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, ஊருக்குள் வரும் குழாயில், முறைகேடாக, 16 இணைப்புகள் கண்டறியப்பட்டு, நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. 25 நாட்களுக்கு மேலாகியும், அவர்கள் இணைப்பை துண்டிக்கவில்லை. இதனால், ஓரிரு நாளில், துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆழ்துளை குழாய் கிணறுகளை ஆழப்படுத்தும் பணி நடக்கிறது. விரைவில், குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-ஜூன்-201921:32:00 IST Report Abuse
THINAKAREN KARAMANI இன்றய நிலைமையில் நம் தமிழ் புலவர்கள் மற்றும் அரசர்கள் இருந்திருந்தார்கள் என்றால் "தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம்" என்ற பொன்மொழியைச் சொல்லிச் சென்றிருப்பார்கள். அத்தகைய சிறந்த தண்ணீர் தானத்தைச் செய்யும் திரு.பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
04-ஜூன்-201913:10:27 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அரசு அதிகாரிகளும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அவலங்களும் காலில் விழுந்து தங்கள் பாவங்களை போக்கவேண்டும்
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
01-ஜூன்-201921:50:39 IST Report Abuse
Siva வாழ்க வளமுடன்..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X