என்ன சொல்கிறது மும்மொழிக்கொள்கை?

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (97)
Advertisement

புதுடில்லி : புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


வாக்குறுதி :


இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேசிய கல்விக்கொள்கை, 1986 ல் உருவாக்கப்பட்டது ; 1992 ல் திருத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய கல்விக்கொள்கை, தேசிய கல்வி ஆணையம் அமைப்போம் என்றும் வாக்குறுதி அளித்தது.


புதிய கல்வி கொள்கை :


அதன்படி கடந்த பா.ஜ., ஆட்சியில், புதிய கல்விக்கொள்கையை வகுக்க கஸ்துாரிரங்கன் தலைமையில், 9 நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தனது பரிந்துரையை மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் சமர்ப்பித்தது. அதனை நேற்று நடந்த, புதிய மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமர்ப்பித்தார்.


484 பக்க வரைவு :


அமைச்சகத்தில் இணையதளத்திலும் அந்த 484 பக்க வரைவு அறிக்கை, பொதுமக்களின் கருத்து கேட்பிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீது ஜூன் 30 வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மும்மொழிக் கொள்கை :


இதில், நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும் மும்மொழிக்கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக்கல்வி என்பது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி என்று இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்தி கட்டாயம்?


இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


தேசிய கல்வி ஆணையம் :


மேலும், தேசிய கல்வி ஆணையம் அமைப்பது, தனியார் பள்ளிகளின் கட்டணத்தை அரசின் ஒப்புதல் பெற்றே நிர்ணயிப்பது, யோகா, நீர்மேலாண்மை உள்ளிட்டவற்றையும் பாடமாக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து :


புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை, nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
02-ஜூன்-201919:43:29 IST Report Abuse
natarajan s 1965 இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த பிறகு அதைவைத்தே ஆட்சியை பிடித்த திமுகவால் 1970 களில் வந்த ஆராதனா என்ற ஹிந்தி படத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஹிந்தி படத்தின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதை தடுக்கமுடியவில்லை . அந்த படம் வந்த பின்னர் தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் ஹிந்தி படம் பார்க்கும் மக்கள் உருவானார்கள் ஹிந்தி படங்களுக்காவே தியேட்டர்கள் வந்தன . ஆதலால் இப்பொது இவர்களால் அந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று தோன்றவில்லை . தமிழ் குடிதாங்கி , சைக்கோ , குருமா , வேல்முருகன் , சீமான் போன்றோர் தங்களது பிழைப்பை உறுதி செய்ய போராட்டம் நடத்த நாடகம் போடுவார்கள் . மக்கள் ஆதரவு கிடைக்காது . வசதி படைத்தோர் எல்லாம் CBSE பள்ளிகளை நோக்கி போவதே தங்கள் பிள்ளைகள் ஹிந்தி படிக்க வேண்டும் என்றுதான் . வருடா வருடம் CBSE பள்ளிகள் அதிகமாகி கொண்டுதான் உள்ளது . அதை இவர்களால் தடுக்க முடிவதில்லை. ஒரு CBSE பள்ளி ஆரம்பிக்க லஞ்சம் 50 லட்சம் வரை நமது அரசியல் வாதிகளால் வாங்கப்படுகிறது, இதை இழக்க அவர்கள் தயாராக இல்லை. நான் சொல்வது கள யதார்த்தம் .
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
02-ஜூன்-201905:51:52 IST Report Abuse
Sukumaran Sankaran Nair மாண்புமிகு செங்கோட்டையன் பரிந்துரைத்துள்ள கல்வித்திட்டங்கள் வரையறை மொழிக்கொள்கைகள் தொலை நோக்குடையதாகும். நாளைய உலக பொது நல அரசு (Commonwealth of Nations ) மொழிகளை அரசியல் நோக்கத்துடன் குறுகிய கண்ணோட்டத்துடன் நமது பார்வையை செலுத்துவது நம்மைச்சுற்றி அமைக்கும் வட்டத்திற்குள் இருந்து வெளிவராமல் செய்துவிடும் .எல்லா மொழிகளையும் ஒருங்கிணைத்து உலக பொது மொழியாக அனைத்து மக்களும் ஏற்கும்படியான திட்டங்களை மொழி வல்லுனர்கள் கருத்தாய்வு செயதுவருகிறார்கள். நாள் காட்டிகளை பொதுவானதாக மாற்றியமைப்பதற்குமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது." உலகம் ஒரு நாடு நாம் யாவரும் அதன் பிரஜைகள்" என்ற பிரகடனமானது விரைவில் மக்களை ஒன்றுபடுத்தும் தீவிர போதனைத்திட்டங்கள் படிப்படியாக மனிதகுல நாகரிக வளர்ச்சிகளை துரிதப்படுத்தும் தன்மை மாற்றம் எனும் செயல்பாடுகள் காலமெனும் சிற்பி நம்மை வடித்தெடுக்கும் கலையாக நாளும் பொழுதுமாக சிந்தனை மாற்ற நடவடிக்கைகள் நீடித்து தொடர்ந்து வளர்ச்சி பெறும் நிலைக்கு ,நம் ஆன்மாவைப் பிரதிபலிக்க உதவும் போதனைத்திட்டங்களில் பங்கேற்று நம்மை மாண்புக்குரியவர்களாக திகழச்செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
01-ஜூன்-201920:46:29 IST Report Abuse
Arunachalam இங்கு கருத்து பதிவு செய்த அனைவரும் செய்தியில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X