பா.ஜ.,வை எதிர்க்க காங்.,க்கு 52 எம்.பி.,க்கள் போதும் : ராகுல்

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (130)
Share
Advertisement

புதுடில்லி : லோக்சபாவில் பா.ஜ., தினம் தினம் கேள்வி கேட்டு திணரடிக்கவும், அவர்களை எதிர்க்கவும் காங்.,க்கு 52 எம்.பி.,க்கள் போதும் என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.latest tamil newsபார்லி.,க்கு காங்., கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக ராகுல் தலைமையில் காங்., பார்லி., உறுப்பினர்கள் குழு இன்று (ஜூன் 01) காலை கூடியது. இதில் பார்லி., குழு தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கட்சி உறுப்பினர்களிடம் பேசிய ராகுல், நம்மிடம் 52 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த 52 எம்.பி.,க்களும் பா.ஜ., எதிர்த்து ஒவ்வொரு இன்ச்சும் போராடுவார்கள் என நான் உறுதி அளிக்கிறேன். பா.ஜ.,வை ஒவ்வொரு நாளும் கேள்வி கேட்டு, எதிர்க்க நம்மிடம் உள்ள 52 எம்.பி.,க்கள் போதும்.


latest tamil newsஇந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்காகவும், அரசியலமைப்பிற்காகவும் காங்.,ன் ஒவ்வொரு உறுப்பினரும் போராட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் வெறுப்பையும், கோபத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்தி போராடுகிறார்கள். அதை நீங்கள் உற்சாகமாக ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். நிதானமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டிய நேரம் இது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh - chennai,இந்தியா
05-ஜூன்-201917:16:27 IST Report Abuse
Ganesh ஆமா, போன தடவையை விட 10 பேர் extraவா கிடைச்சு இருக்காங்க இல்லை. 42 பேர வெச்சுகிட்டேய் பாராளுமன்றத்தை செயல்பட விடாம பண்ணின உங்களுக்கு தற்போது 10 பேர் கூடுதலா கிடைச்சு இருக்காங்க. ஹ்ம்ம் எத்தனை நாட்களை நாசமாக்க போறாங்களோ தெரியலை.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
03-ஜூன்-201911:11:46 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை பற்றி கவலைப் படாத கூட்டம்தான் நிறைய இருக்கு போல.
Rate this:
Cancel
Panorama - Chennai ,இந்தியா
02-ஜூன்-201911:34:22 IST Report Abuse
Panorama If you are on opposition party, it does not mean that you need to oppose the Government. Matured politician is the one who would wholeheartedly appreciate good moves by Government and admonish the ones which would not bring benefits to the public as a whole. It is not the Nos (no of MPs) matter, but the attitude matters. Whether someone is in ruling party or in the opposition, their ultimate intention must be to serve the public. In America both Obama and Hilary Clinton were competing each other and finally Obama came to power. Nevertheless, Obama had taken Hilary into confidence and had her in his cabinet as Secretary. Secondly on the same stage I saw both Obama and Mrs. Clinton were aggressively criticizing each other while whole audience watching. There was a question to both contestants (Obama and Hilary) as to what is the character/trait you like the most with your opponent was asked to both. Both were matured enough to recognize and appreciate his/her certain qualities in front of the whole public. However, we do not have such politicians who appreciate the great qualities of the opponents. Secondly the winning party also must think of bringing the opposition party to join the Government by allotting certain portfolios. This would bring in transparency and consensus while taking major governments decisions. The day when it happens, I am sure we would witness a sea change in our political area and march towards progress.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X