அரசியல் செய்தி

தமிழ்நாடு

இருமொழிக்கொள்கை தொடரும் ; செங்கோட்டையன்

Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
இருமொழி, மும்மொழி, பரிந்துரை, செங்கோட்டையன், கல்வி கொள்கை

சென்னை ; தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
01-ஜூன்-201917:43:32 IST Report Abuse
Jaya Ram அன்புள்ள சகோதரரே பழைய நண்பர் என்றமுறையில் உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன் எம்ஜிஆர் எதற்காக ஆரம்பித்தார் என்பது உங்கள் மந்திரிசபை சகாக்கள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் ஊழலை எதிர்த்தும், வாரிசு அரசியலை எதிர்த்தும் ஆரம்பிக்கப்பட்டது அதற்காகவே நாம் திமுக வை எதிர்த்து பல்வேறு துன்பங்களுக்கும் ஆளாகி 1977 இல் அவரை ஆட்சியில் அமர்த்தினோம் அவர் இருக்கும் வரை ஊழல் என்பது வெளிப்படையாக இல்லாமலும் , வாரிசு அரசியல் என்பது அறவே இல்லமல் இருந்தது ஆனால், தற்போது நிலைமையே தலை கீழ் ஊழல் புரிந்து மாட்டிகிட்டு பிஜேபியின் வசம் சென்று நமது தனித்துவத்தினை இழக்க வைத்துவிட்டனர் உங்களது சகாக்கள் பற்றாக்குறைக்கு இப்போ வாரிசு அரசியலினால் மத்தியில் கூட்டணியின் மூலம் கிடைக்க வேண்டிய மந்திரி பதவியில் தடைபட்டு விட்டது என்று மாற்றுக்கட்சிக்காரர்கள் பேசும் அளவிற்கு வந்துவிட்டது எனவே அதிமுக என்ற இந்த பேரியக்கத்தின் பதவி சுகம் தேடி அலையும் பதர்களே அதிகரித்து விட்டன எனவே இதை மீட்டெடுக்க இன்னொரு புனிதர் இந்த இயக்கத்தில் தோன்றினால்தான் உண்டு தற்சமயம் ஏற்கனவே எடுத்த முடிவின்படியே கல்விக்கொள்கை எடுக்கப்பட்டிருக்கிறது இதை மக்கள் மன்றத்தில் வைத்து கருத்து கேட்காமல் ஏதோ ஒரு இணையத்தினை காட்டி அதில் ஜூன் 30 வரை கருத்து தெரிவிக்கலாமாம் ஏனப்பா நாடுதழுவிய மாற்றத்தினை ஏற்படுத்த கூடிய ஒரு புதிய கொள்கையினை மக்கள் விவாதத்திற்கு உட்படுத்தி அதன்பின் அமுல்படுத்தவேண்டும் ஆனால் இது அப்படி நடக்கப்போவதில்லை ஏற்கனவே ஹிந்தி என்பது தமிழ்நாடு , மேற்கு வங்கம் தவிர அணைத்து மாநிலங்களிலும் உள்ளது எனவே இப்போது கொண்டுவரப்படுவது இந்த இருமாநிலங்களிலும் ஹிந்தியினை அமுல்படுத்துவதே நோக்கம் அதற்காகத்தான் இப்படி தாய்மொழி ஹிந்தி தவிர்த்த மாநிலங்கள் கட்டாயமாக மூன்றவது பாடமாக ஹிந்தியினை படிக்கவேண்டும் ஹிந்தியினை தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் இந்தியாவின் பிற மொழிகள் ஏதாவது ஒன்றினை மூன்றாவது பாடமாக எடுத்துக்கொள்ளலாம் என்பதே இப்போ நிலைமை ஹிந்தி மொழியினை பற்றி அல்ல உன்னுடைய வாழ்வு உரிமையினை பற்றியே காரணம் ஹிந்திமொழி தாய்மொழியாக கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மூன்றாவது மொழித்தேர்வு உரிமை உனக்கு மறுக்கப்பட்டு இரண்டாந்தாரக்குடிமகனாக்க படுகிறார்கள் தாய் மொழி ஹிந்தி இல்லா மக்கள் இப்படித்தான் ஆரம்பத்தில் இலங்கையில் சிங்களவர்கள் அவர்களுக்கு முன்னுரிமை என்றாக்கி தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கினர் அதுவே நாளடைவில் இனப்போராக வெடிக்கும் அளவிற்கு கொண்டு போய் விட்டது அங்கேயே இரண்டே மொழிதான் ஆனால் இங்கோ பல மொழிகள் உள்ளன எனவே நீங்கள் கட்டாயம் அடக்கப்படுவீர்கள் ஹிந்திமொழி பேசுபவர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற அறிவிப்பும் விரைவில் வரும் எதிர்பாருங்கள் , அடுத்து எட்டுவழிச்சாலையில் ஏன் இவ்வளவு பிடிவாதம் காரணம் என்ன இருக்கும் கொஞ்சம் நஞ்சம் அதிமுக மீதுள்ள மக்கள் ஆதரவையும் இப்படி நீங்கள் செயல் படுவதால் அழிக்கப்போகிறார்கள் ஒன்று இதுதான் சமயம் என்று எங்களால் எட்டுவழிச்சாலை திட்டம் , ஹைட்ரொ கார்பன் திட்டங்களை மெதேன் திட்டங்களை அமுல்படுத்த முடியாது என்று கூறி ஆட்சியினை ராஜினாமா செய்து தேர்தலை சந்தியுங்கள் தோற்றாலும் பரவாயில்லனு அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் இந்த பிரச்சினைகளி ஸ்டாலினும் மோடியும் எப்படி சந்திக்கிறார்கள் என்று பாப்போம் இதை விடுத்தது இன்னும் பதவி மோகத்தில் இருந்தீர்கள் என்றல் அசிங்கப்பட்டு போவீர்கள் , பின் அரசியலில் இருந்து அழிக்கப்பட்டு விடுவீர்கள் இதுவே நல்ல தருணம்
Rate this:
Cancel
thiru - chennai,இந்தியா
01-ஜூன்-201916:52:28 IST Report Abuse
thiru நாம் இந்தி எதிர்ப்பாளர்கள் அல்ல, இந்தி தமிழ்நாட்டில் கொண்டு வரலாம், ஆனால் தமிழ் பாடப்பிரிவில் மட்டும் மதிப்பெண்கள் அதிகபட்சமாக எடுத்தால் தான் தேர்ச்சி என்ற நிலையை கொண்டு வர வேண்டும், அதிலும் எழுத்து தேர்வு மட்டுமின்றி பேச்சு தேர்வு, இலக்கிய வாய மொழி தேர்வு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், இதில் தேர்ச்சி இருந்தால் தான் மேல் படிப்புக்கு அல்லது பணிக்கு செல்ல முடியும் என்ற நிலையை கொண்டு வரவேண்டும். நம் பொதுமக்கள் பணம் கொடுக்கும் மொழியை மட்டும் தேர்ந்து எடுக்கக்கூடிய மனநிலையை கொண்டவர்கள், ஆகையால் இஇப்படி செய்தல் மட்டுமே நம் மொழியையும் காப்பாற்ற முடியும் மற்ற மொழிகளை அறிந்து கொள்ள முடியும்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
01-ஜூன்-201916:42:22 IST Report Abuse
J.Isaac தமிழன் அவர்களே தெலுங்கர்களையும் வடநாட்டவரையும் யாரும் தமிழ்நாட்டுக்கு அழைக்கவில்லை . புழைப்பு நடத்துவதற்கு இங்கு குடியேறியுள்ளீர்கள் . அந்தந்த மாநில மக்களுக்கு தனி உரிமையுண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X