பா.ஜ.,வால் ஒன்றும் செய்ய முடியாது:ஓவேசி

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (80)
Share
Advertisement

ஐதராபாத் : பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தது பற்றி முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டரீதியான சுதந்திரம் உறுதி செய்யப்படும் என இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவேசி பேசி உள்ளார்.latest tamil newsபா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து, எதிர்த்து வந்தவர் ஓவேசி. இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் இருந்து 4வது முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஓவேசி, மோடி கோயிலுக்கு போனால், நாம் மசூதிக்கு போவோம். மோடி குகைக்கு சென்று அமர்ந்தால், இஸ்லாமியர்களாகிய நாம் மசூதியில் தொழுகை நடத்துவதை நினைத்து பெருமைபடுவோம்.


latest tamil news300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் இந்தியாவில் அரசியலைப்பு சட்டம் செயல்பாட்டில் உள்ளது. பா.ஜ., பெற்ற 300 இடங்களைக் கொண்டு எங்களின் உரிமைகளை பறிக்க முடியாது. இந்திய சட்டம், அரசியலமைப்பின் படி நாங்கள் எங்களின் மதத்தை பின்பற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை சம உரிமை கொண்டவர்களாக நடத்துங்கள். வாடகைக்கு குடியேறியவர்களை போல் நடத்தாதீர்கள்.
300 இடங்களை வென்று விட்டதால் நாட்டின் பிரதமர் அவர் விரும்பிய எதை வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால் அது நடக்காது. ஓவேசி இந்தியாவிற்காக போராடுவான் என்ற உறுதியை நான் அளிக்கிறேன் என்றார்.


latest tamil newsதொடர்ந்து இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பேசிய அவர், வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதையும், 40 அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதையும் ஏற்க முடியாது. இஸ்லாமில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றவர்கள் சாத்தானின் போதனைகளை பின்பற்றுகிறார்கள். இஸ்லாமை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
03-ஜூன்-201900:33:23 IST Report Abuse
Aarkay Divide and rule பிழைக்க வழி???? இதெல்லாம் ஒரு பிழைப்பு கேவலமான ஜந்து
Rate this:
Share this comment
Cancel
02-ஜூன்-201911:45:47 IST Report Abuse
theruvasagan அடிக்க ஆரம்பிக்க வேயில்லை. அதுக்குள்ள எதுக்காக இப்படி ஊளையிடணும். ஹா.புரிஞ்சி போச்சு. போனமாசம் இருவத்திமூணாந்தேதி குடிக்கவச்ச பேதி மருந்து கலக்கோ கலக்குன்னு கலக்கி இப்ப வேலைய காட்ட தொடங்கிடுச்சு. தேச விரோத கும்பல் பொலம்ப இன்னும் ஏகப்பட்ட ட்டிரீட்மென்டு வச்சிருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
02-ஜூன்-201907:40:03 IST Report Abuse
ராஜ்குமார் விகே பாய், உங்கள பிஜேபி அரசு எந்த வித்துலேயும் குத்தல்ல, மாறா ஜனநாயகத்த நூறு சதவீதம் மிஸ்யூஸ் பண்ணிட்டு திரியுறது உங்க கும்பல். இத பிஜேபியோ ஹிந்துவோ சொல்லல, உலகமே சொல்லுது. ஞாயமா இருக்க பாருங்க, ஒங்க மாதிரி ஆளுகளால எங்க எதுத்த பிளாட் வீட்டு பாயம்மா எங்க வீட்டுக்காரங்கட்ட பேசவே தர்மசங்கடப்படுது. நீங்க மூடிட்டு இருந்தாலே போதும், ஒரு பிரச்சனையும் வராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X