ராகுலின் செல்வாக்கை உயர்த்த சோனியா திட்டம்

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement

புதுடில்லி : தனது மகன் ராகுலின் செல்வாக்கை உயர்த்தவும், அவரையே மீண்டும் கட்சி தலைவராக்கவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா திட்டம் வகுத்து வருகிறார்.latest tamil news


லோக்சபா தேர்தலில் காங்., பெற்ற படுதோல்விக்கு பிறகு கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார் ராகுல். ஆனால் இதனை ஏற்க மறுத்து வரும் சோனியா, தனது மகனை மீண்டும் கட்சி தலைவர் பதவியில் அமர்த்த திட்டமிட்டுள்ளார். இன்று (ஜூன் 1) நடைபெற்ற காங்., பார்லி., குழு கூட்டத்தில் சோனியா மீண்டும் பார்லி., குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் சோனியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தான் பார்லி., குழு தலைவரானால் ராகுலை மீண்டும் கட்சி தலைவர் பதவியில் அமர வைக்கலாம் என்பதே சோனியாவின் திட்டம். கட்சியின் பார்லி., குழு தலைவர் என்ற முறையில் இரு அவைகளுக்கும் தலைவரை நியமிக்கும் அதிகாரம் அவரிடமே இருக்கும்.


latest tamil news


லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக ராகுலை அமர்த்துவதற்கான வேலைகளையே சோனியா தற்போது செய்து வருகிறார். 16 வது லோக்சபாவின் போது இந்த பொறுப்பு மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கப்பட்டிருந்தது. அவர் முதல் முறையாக கர்நாடக லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். 2014 தேர்தலை விட காங் கூடுதல் எம்.பி.,க்களை பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற 2 உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர்.


கட்சிகளை இணைக்கும் திட்டமா? :


சரத் பவாரின் தேசியவாத காங்., கட்சியை காங்., உடன் இணைக்க போவதாக பல விதமாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதற்காக தான் 2 நாட்களுக்கு முன்பு சரத் பவார், ராகுலை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்காகவே இந்த கட்சிகள் இணைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. காங் - தேசியவாத காங் கட்சிகள் இணைக்கப்பட்டால், லோக்சபாவில் அவர்களின் பலம் 57 ஆக அதிகரிக்கும். எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு தேவையான 55 இடங்களை விட இது கூடுதலாக 2 இடங்கள் ஆகும்.
லோக்சபா தேர்தல் சமயத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே, புனேவில் ராகுலை தனியாக சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பிற்காக பிரசாரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் புனேவில் தங்கி உள்ளார் ராகுல்.


latest tamil news


லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறவும், காங்.,உடன் கூட்டணி வைக்கவும் இந்த கட்சிகள் இணைப்பு வியூகத்தில் சரத் பவாரின் பங்கு முக்கியமானது. 1999 ம் ஆண்டு சோனியா வெளிநாட்டினர் என்பதை காரணம் காட்டி, அவரை பிரதமர் வேட்பாளராக்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, காங்., உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு சென்றவர் சரத் பவார்.


ராகுல் தோல்விக்கு சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் காரணமா? :


உ.பி.,யில் காங்., பெற்ற மோசமான தோல்விக்கும், அமேதியில் ராகுல் தோற்கடிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது காங்., இதற்காக சோனியா தலைமையில் 2 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சோனியாவால் நியமிக்கப்பட்ட கே.எல் சர்மாவும், காங்., செயலாளர் ஜூபைர் கான் ஆகியோர், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன் அக்கட்சிகளின் தொண்டர்களும் ராகுலுக்கு அடிமட்ட அளவில் ஆதரவை தரவில்லை எனவும் கூறி உள்ளனர்.
சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தாலும், ராகுலுக்கு உதவுவதற்காக அமேதி தொகுதியில் அக்கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இருந்தும் அவர்களின் கட்சியினர் அமேதியில் ராகுலுக்கு ஆதரவு தரவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
02-ஜூன்-201910:57:49 IST Report Abuse
Suppan என்னது செல்வாக்கை உயர்த்தப் போகிறாரா? இருந்தால்தானே உயர்த்துவதற்கு? ஒவ்வொரு முறையும் ஏதாவது உதறிவிட்டு இருப்பதையும் கெடுத்துக் கொள்ளும் இவரின் "செல்வாக்கை " ..........பாவம் பிழைத்துப் போகட்டும்
Rate this:
Cancel
Jothi - PUDUCHERRY,இந்தியா
02-ஜூன்-201910:26:13 IST Report Abuse
Jothi ராகுல் என்ற தனி மனித தாக்குதல்களில் சொன்ன வார்த்தைகள் அனைத்திற்கும் பலன் உண்டு....ஆம் விரைவில் ராகுல் எழுச்சி பெரும் காலம் உண்டு என்பதனை நினைவில் கொள்க
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,
02-ஜூன்-201916:23:35 IST Report Abuse
வல்வில் ஓரிஇவ்ளோ வயசுக்கு அப்புறமா ? நல்ல நம்பிக்கை தான்!! முயற்சி பண்ணுங்க!...
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
02-ஜூன்-201908:30:18 IST Report Abuse
வல்வில் ஓரி ஜாக்கி வேணும்னா ஒன்னு அனுப்பவா? ஈஸியா உயர்த்தி விடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X